தன் மகனுக்கு கெட்ட பழக்கங்கள் இருப்பதை நினைத்து ஒரு தாய் மிகவும் வருத்தப் பட்டார். ஆனால், மகனோ, ‘இதற்கென்ன அம்மா! எதற்காக இப்படி கவலை படறீங்க. இது ஒரு சிறிய விஷயம்!’ என சிறு பிள்ளை தனமாக பேசினான்.
அவனை எப்படி திருத்த? என தாய்க்கு தெரியவில்லை. ஒரு அறிவார்ந்த முதியவரிடம் அவர் ஆலோசனை கேட்டார்.
முதியவர் அந்த தாயின் மகனை ஒரு காட்டு பகுதிக்கு அழைத்து சென்றார். முதியவர் அங்கே இருந்த ஒரு மரத்தை காட்டி, அந்த சிறுவனிடம், பிடுங்க சொன்னார். சிறுவன் எவ்வளவு முயற்சித்தும் முடியவில்லை. மேலும் சிறிது தூரம் இருவரும் நடந்து சென்றனர். அங்கே இருந்த ஒரு நன்கு வளர்ந்த செடியை காட்டி, அந்த செடியை முதியவர் பிடுங்க சொன்னார். அந்த சிறுவன் எவ்வளவோ முயற்சித்தும் அவனால் முடியவில்லை.
சிறிது தூரம் நடந்த பின்பு, நடுத்தரமாக வளர்ந்த செடியை காட்டி முதியவர் பிடுங்க சொன்னார். ஆனால் அந்த சிறுவனால் முடியவில்லை.
இப்பொழுது அந்த முதியவர் கூறினார்,‘பழக்கங்களும் இது போன்றது தான். நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும், ஆரம்பத்திலேயே சரி செய்யா விட்டால், பிற்காலத்தில் மாற்றுவது மிக கடினம்’ என்றார்.
சிறுவன் உணர்ந்தான்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.