வாழ்க்கை பிரச்சனைகளுக்கு ( solve problems )அனைத்து சூழலிலும் பிறரின் ஆலோசனை இல்லாமல் தீர்வு கண்டு விட முடியும் என சொல்ல முடியாது.
கண்ணில் உள்ள பிரச்சனைக்கு கண் மருத்துவரால் தான் தீர்வு சொல்ல முடியும். சட்ட பூர்வமான ஆலோசனையை காவல் அதிகாரியோ, வக்கீலோ, நீதிபதி போன்றோர் தான் சரியான ஆலோசனை சொல்ல முடியும்.
இப்படி ஆலோசனை தேவை என்ற சூழல் வரும் பொழுது யாருடைய ஆலோசனையை நீங்க கேட்கறீங்க? என்பது உங்க வெற்றியை தீர்மானிக்கும்.
அனைத்து மருத்துவர்களுமே நல்ல சிகிச்சை கொடுப்பார்கள் என சொல்ல முடியாது.
நீங்க ஆலோசனை கேட்கும் நபருக்கு சரியான தீர்வு சொல்லும் தகுதி இருக்கிறதா? என முதலில் யோசியுங்க.
இரண்டு பூனை குட்டிகளிடம் ஒரு பன் இருந்தது. யாருக்கு எவ்வளவு என்பதில் இரண்டுக்கும் சண்டை. ஒரு முதிய பூனையை அணுகி இந்த இரண்டு பூனை குட்டிகளும் தீர்வை கேட்டது. இந்த முதிய பூனை பன்னை இரண்டாக பிரித்து தராசில் வைத்தது. ஒரு பன் துண்டின் அளவு அதிகம் என சிறு துண்டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டது.
பின் மற்றொரு பன் துண்டின் அளவு அதிகம் என சிறு துண்டை எடுத்து வாயில் போட்டுக் கொண்டது. இப்படி மாறி மாறி அனைத்து பன்னையும் வாயில் போட்டுக் கொண்டது. நீங்க ஆலோசனை கேட்கும் நபர் இந்த முதிய பூனை போன்றும் இருக்கலாம்.
உயர்ந்த தரமுல்ல தீர்வை எந்த தரமான ஆலோசகரால் கொடுக்க முடியும்? என யோசியுங்க. எப்பொழுதும் சரியான ஆலோசகரை அணுகுங்க.
ஆலோசனை கொடுப்பவருக்கு, உங்க பிரச்சனையின் தீர்வை மாற்றி அமைக்கும் சக்தி உண்டு.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.