தனிமையை நிர்வகிப்பது எப்படி? 6 பழக்கங்கள்! How To Overcome Loneliness in Tamil | AsK LIFE Motivation

தனிமையை நிர்வகிப்பது எப்படி? ( How To Overcome Lonely Feeling? ) என இப்ப பார்க்கலாம்.

தனிமையை “தவிர்க்க முடியாமல் ஏற்று வாழ” உங்க சூழல் காரணமாக அமைந்தாலும் habits பழக்கங்களை மாற்றுவதன் மூலமாக தனிமையை மாற்றி அமைக்க முடியும்.

தனிமையை எதிர்த்து போராட முடியாமல் கஷ்டமான மன நிலையுடன் இந்த கணம் நீங்க இருக்கலாம்.

தனிமையினால் வாழ்வில் கஷ்டங்கள்! ஏற்படுகிறது என்ற மனநிலை, தனிமையை வாழ்வின் “சாபமாக” நினைக்கும் மன நிலை உங்களுக்கு இருந்தா மாத்தி யோசியுங்க.

இந்த கணத்தில் இருந்து தனிமையை வாழ்வில் கிடைத்த வரமாக பாருங்க. யாருடைய கட்டுப் பாடும் இன்றி, நினைத்ததை சாதிக்க, ‘வாழ்வில் கிடைத்துள்ள பொன்னான நேரங்கள் தனிமை’ என வாய்ப்பாக பார்க்க ஆரம்பியுங்க. இதுவரை வாழ்க்கையில் அமைந்துள்ள negative ஆன தருணங்கள் வேறு போல positive ஆக தெரிய ஆரம்பிக்கும்.

உங்க வாழ்வில் என்றாவது நீங்க தனிமையை உணர்ந்த சந்தர்ப்பத்தில், திடீரென ஒரு முக்கிய வேலையை முடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இருக்கும். அந்த வேலையை விரைவாக முடித்து விட, நேர காலம் பார்க்காமல் busy ஆக செயல் பட்டு இருப்பீங்க. வேலையை முடித்து விட்டு, பொறுமையாக நேரத்தை கவனித்த பொழுது? மிக வேகமாக நேரம் சென்றதை உணர்ந்து இருப்பீங்க.

தனிமையில் மெதுவாக நகர்ந்த கடிகார முட்கள், busy ஆன வேலை என்ற சூழல் ஏற்படும் பொழுது, நேரம் சென்றதே உங்களுக்கு தெரிந்திருக்காது.

தனிமையை சமாளிக்க இந்த யுக்தியை செயல்படுத்துங்க. உங்க life style லில் உங்களுக்கு பொருத்தமான ‘busy ஆன habits’ பழக்கங்களை உருவாக்குங்க. தனிமையை manage செய்ய முடியும்.

Healthy lifestyle ஆரோக்கியமான வாழ்க்கை முறை கொண்டவர்கள் பொதுவாக கடைபிடிக்க கூடிய 6 busy ஆன habits ஐ பற்றி இப்ப நாம பார்க்கப் போறோம். இவற்றை குறிப்படுத்து, தின வாழ்வில் செயல் படுத்துங்க. தனிமை உணர்வு நீங்கி மகிழ்வோடு வாழலாம்.

6 முக்கிய பழக்கங்கள் இதோ:

முதல் பழக்கம்: வாழ்வின் நோக்கத்திற்காக வாழ்தல் ( Purpose of Life )

ஒரு நாளின் 24 மணி நேரத்தில் பெரும்பான்மையான நேரத்தை ‘வாழ்வின் நோக்கத்திற்காக’ ( life purpose ) வாழனும்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வாழ்க்கை நோக்கம் இருக்கும். கைரேகை தனித்துவம் மிக்கதாக இருப்பது போல, வாழ்க்கை நோக்கமும் தனித்துவமாக இருக்கும். உங்களுடைய வாழ்க்கை நோக்கம் என்ன?

ஒரு நல்ல தொழிலை அமைத்துக் கொள்ள ‘படிப்பில் கவனம் செலுத்துவது’ மாணவர்களின் நோக்கமாக இருக்கும். தொழிலை சிறப்பாக செய்து அடுத்த படிநிலைக்கு உயர்வது வேலைக்கு செல்பவரின் நோக்கமாக இருக்கும்.

இது போல அவரவர் இருக்கும் சூழலுக்கு ஏற்ப, ஆர்வத்திற்கு ஏற்ப வாழ்வில் நோக்கம் இருக்கும்.

வாழ்வில் நோக்கம் இல்லாதவர், நேரத்தை எப்படி பயன் படுத்துவது என புரியாமல் எதையாவது தேவை அற்ற negative ஆன விஷயங்களில் மனதை செலுத்தி கஷ்டப் படுவாங்க. சூழலை ஆரோக்கியமாக அமைத்துக் கொள்வதற்கு பதிலாக தவறான வாழ்க்கை பழக்கங்களை அமைத்து வாழ்வாங்க.

உங்க விருப்பம், சூழலுக்கு ஏற்ப உங்களுக்கு என பயனுள்ள வாழ்க்கை நோக்கத்தை உருவாக்குங்க.

தின வாழ்வின் பெரும்பாமையான நேரத்தை உங்களுடைய வாழ்க்கை நோக்கத்திற்கு என பயன்படுத்த busy யான வாழ்க்கை பழக்கங்களை உருவாக்குங்க. அதற்கென, ‘முன் கூட்டிய திட்டமிடல்’ செய்யுங்க.

இரண்டாவது பழக்கம்: உடல் ஆரோக்கியத்திற்காக அதிகாலை நேரத்தை ஒதுக்குதல் ( Physical Health )

உடல் ஆரோக்கியம் மிக அவசியம். நீங்க நினைப்பதை செயல் படுத்த உடல் ஒத்துழைக்கனும். அதிகாலை சூரியன் உதயமாகும் பொழுதே தினம் காலையில் எழும் பழக்கத்தை ஏற்படுத்துங்க.

Yoga, walking போன்ற உடற்பயிற்சிகளை, குறைந்தது 30 நிமிடங்களில் இருந்து ஒரு மணி நேரம் ஆவது செய்யுங்க. உடற்பயிற்சி செய்வதற்கு முன் இருந்த உடல், மன நிலைக்கும் பயிற்சிக்கு பின் இருக்கும் உடல், மன நிலைக்கும் உடனடி வேறுபாடு தெரியும். உடலும் மனமும் சுறு சுறுப்புடன், புத்துணர்வுடன் இருப்பதை உணர்வீங்க. பயிற்சியில் முழு கவனமும் இருக்குமாறு நிகழ் காலத்தில் மனதை செலுத்தி பயிற்சி செய்யுங்க. அப்பொழுது தான் முழு பலன் கிடைக்கும்.

மூன்றாவது பழக்கம்: மன ஆரோக்கியத்திற்காக அதிகாலை நேரத்தை ஒதுக்குதல் ( Mental Health )

உடல் ஆரோக்கியத்தைப் போல மன ஆரோக்கியம் மிக முக்கியம். மனதை கட்டுப் படுத்த தெரிந்திருக்கும் பொழுது தான் உங்க உடலை உங்களால் கட்டுப் படுத்த முடியும். வாழ்வையும் கட்டுப் படுத்த முடியும்.

மன ஆரோக்கியத்திற்காக காலை நேரத்தில் உங்களின் உள் positive வாக motivation ஐ ஏற்படுத்த, உங்களுக்கு ஏற்ற audio / video / book என எதிலாவது நேரத்தை செலவிடுங்க. காலை நேரத்தில் உண்டாகும் மனநிலை, நாள் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அதிகாலை எழுந்தவுடன் meditation செய்யும் பொழுது மன புத்துணர்வு கிடைக்கும்.

நான்காவது பழக்கம்: வாழ்க்கை பொறுப்புகளில் கவனத்தை செலுத்துதல் ( Responsibilities )

உங்களுக்கு என கடமைகள், பொறுப்புகள் வாழ்வில் ஒரு பக்கம் இருந்தாலும் உங்களுடைய குடும்பம், சமுதாயத்திற்கு என நீங்க செய்ய வேண்டுய முக்கிய கடமைகள், பொறுப்புகள் உங்களுக்கு இருக்கும். இந்த பொறுப்புகளை செயல் படுத்த தினம் நேரம் ஒதுக்குங்க. அதற்கு முன் கூட்டிய திட்டமிடுங்க.

பிரபஞ்ச நியதி படி, செயலுக்கு ஏற்ப தான் விளைவு ஏற்படும். ஒவ்வொரு செயலுக்கும் கண்டிப்பாக விளைவு உண்டு. உங்களுடைய பொறுப்பு, கடமையை நீங்க சரிவர செய்யும் பொழுது நல்ல வாழ்க்கை மாற்றத்தை உங்களால் உணர முடியும்.

ஐந்தாவது பழக்கம்: பயனுள்ள பொழுதுபோக்கில் கவனத்தை செலுத்துதல் ( Effective Entertainment )

நீங்க தினம் செலவிடும் பொழுது போக்கிற்கான நேரத்தில் எவ்விதமான பொழுது போக்கில் மனதை செலுத்தறீங்க? ஒரு பொழுது போக்கில் நேரத்தை செலவிட்ட பின்பு, ‘உங்களுக்குள் நேர்மறை ஆற்றல் அதிகரித்து, உங்களுடைய அடுத்த நிமிடங்களை மேலும் புத்துணர்வோடு செயல்படுத்த உங்களால் முடிந்தால்,’ அந்த பொழுது போக்கு பயனுள்ள பொழுதுபோக்கு என அறியலாம். நீங்க எதனை மனதளவில் ஈர்க்கறீங்களோ அது தான் உங்களை நோக்கி வரும்.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று பயனுள்ள பொழுது போக்கு. சிலருக்கு கோவிலுக்கு செல்வது, சிலருக்கு நல்ல புத்தகங்களை படிப்பது, சிலருக்கு நல்ல வீடியோ, நல்ல டீவி program ஐ பார்ப்பது, இப்படி எந்த விஷயங்கள் உங்களுக்கு பயனை தருகிறது? என யோசித்துப் பாருங்க.

‘மன ஆரோக்கியத்தை கெடுக்கும், பொழுது போக்கில் மனதை செலுத்த கூடாது’ என முன் கூட்டியே திட்டமிடுங்க.

ஆறாவது பழக்கம்: நல்ல உறக்கம் ( Good Sleep )

ஆரோக்கியமான இரவு உறக்கம் உங்களுடைய மன ஆரோக்கியத்தை மட்டும் அல்ல, உடல் ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.

இரவு குறைந்தது 6 ல் இருந்து 8 மணி நேரமாவது உறங்குங்க. பகல் தூக்கத்தை தவிர்த்திடுங்க.பகலில் தூக்க வேண்டும் என்ற தேவை தவிர்க்க முடியாமல் இருந்தால்,10 ல் இருந்து 20 நிமிடங்களுக்கு மேல் உறங்காதீங்க.

குழப்பமான மன நிலையுடன் இருக்கும் பொழுதும், என்ன செய்வது என புரியாமல் நேரத்தை எப்படி செலவிட என தெரியாமல் இருக்கும் பொழுதும் இதற்கு முன் வாழ்வில் நடந்த விஷயங்களை நினைத்து பார்க்க தனிமை தூண்டும்.

Positive ஆன நல்ல நினைவுகளை நினைத்துப் பார்ப்பது தவறில்லை. ஆனா, negative ஆன நினைவுகளை நினைத்து மனம் கஷ்டப் படும் பொழுது, Positive நினைவுகளில் கவனத்தை திசை திருப்பி வாழப் பழகுங்க. தனிமை கஷ்டப் படுத்தாது.

சோகமான நினைவுகள் எவர் வாழ்விலும் இல்லாமல் இல்லை. இந்த சோகமான நினைவுகளுக்கு உயிரோட்டம் கொடுக்க போகிறீர்களா? அல்லது நல்ல மகிழ்ச்சியான நினைவுகளுக்கு, சவாலாக சாதிக்க தூண்டும் நினைவுகளுக்கு உயிரோட்டம் கொடுக்க போகிறீர்களா? என்பது உங்க முடிவில் தான் இருக்கு. தனிமை சாபமாக மாறாமல் இருக்க, நல்ல மகிழ்ச்சியான நினைவுகளுக்கு சவாலாக சாதிக்க தூண்டும் நினைவுகளுக்கு உயிரோட்டம் கொடுங்க.

வாழ்வின் நோக்கத்ற்காக வாழ்தல், உடல் ஆரோக்கியத்திற்காக அதிகாலை நேரத்தை ஒதுக்குதல், மன ஆரோக்கியத்திற்காக அதிகாலை நேரத்தை ஒதுக்குதல், வாழ்க்கை பொறுப்புகளில் கவனத்தை செலுத்துதல், பயனுள்ள பொழுதுபோக்கில் கவனத்தை செலுத்துதல், நல்ல உறக்கம் இந்த 6 பழக்கங்களையும் உங்களுக்கு ஏற்றார் போல தின வாழ்வில் நீங்க பழக்கப் படுத்தி உங்களை நீங்க என்றும் busy ஆக வைத்திருக்கும் பொழுது தனிமை உங்களை கஷ்டப் படுத்தாது. தனிமையை நல்ல விதத்தில் நிர்வகித்து வாழ முடியும்.

தனிமை என்பது நீங்க பார்க்கும் கோணத்தைப் பொறுத்து, ‘வரமாகவோ சாபமாக’ வாழ்வில் அமையும். தினப் பழக்கங்களை busy ஆக மாற்றுங்க. தனிமை வரமாக மாறும்.


UMA LIFE COACH – Uma, Life Coach

உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.

%d bloggers like this: