அதிக பணம் சம்பாதிக்க, சிறந்த வழி! Easy Way To Earn Money in Tamil | AsK LIFE Motivation

Earn Money Tamil Quote

தன் 15 வயது மகனான சந்துருவிற்கு, பணத்தின் மதிப்பை புரியவைக்க, தொழிலதிபர் ஆகாஷ் ஆசைப் பட்டார். அதற்காக அவருக்கு ஒரு யோசனை தோன்றியது. இந்த யோசனையின் படி, அவர் தன் மகனிடம், ‘நீ தினம் 10 ரூபாய் சம்பாதித்து கொண்டு வந்து கொடுத்தால் தான் உனக்கு இனி வீட்டில் இரவு உணவு கிடைக்கும்’ என்றார்.

தந்தை கூறியதை கேட்ட மகனுக்கு எதுவும் புரியவில்லை. இருப்பினும், தன் தாயிடம் சென்று தன் கஷ்டத்தை கூறினான். மகன் இரவு உணவு இன்றி உறங்குவது, அவன் தாய்க்கு விருப்பம் இல்லை. அதனால், அவரே 10 ரூபாயை தன் மகனிடம் கொடுக்க, அதனை தன் தந்தையிடம் கொடுத்து இரவு உணவை சாப்பிட அச்சிறுவன் முற்பட்டான். எங்கிருந்து இந்த பணம் வந்தது? என புரிந்து கொண்ட தந்தை, இந்த பணத்தை வீட்டின் பின் உள்ள கிணற்றில் போட்டு விட்டு வா, உனக்கு உணவு கொடுக்கிறேன் என்றார் தந்தை. மகனும் இதையே செய்தான்.

அடுத்த நாள், தன் தாத்தாவிடம் பணத்தை பெற்று, இரவு உணவிற்காக தன் தந்தையிடம் கொடுத்தான் சிறுவன். அவரும், பணம் வந்த விதம் புரிந்து,  இந்த பணத்தை வீட்டின் பின் உள்ள கிணற்றில் போட்டு விட்டு வா, உனக்கு உணவு கொடுக்கிறேன் என்றார். மகனும் இதையே செய்தான்.

‘இனி நீ யாரிடமும் உழைக்காமல் பணம் வாங்க கூடாது. உழைத்து கொண்டு வரும் பணத்திற்கே நாளை இரவு உணவு’ என கண்டிப்பாக தந்தை சொல்லிவிட்டார். மகனும் வேறு வழி இன்றி, வீடு வீடாக சென்று  பொருட்களை கொடுத்து, மிக கஷ்டப் பட்டு 10 ரூபாய் சம்பாதித்தான். அன்று இரவு உணவிற்கு இந்த பணத்தை தந்தையிடம் சந்துரு கொடுத்தான்.

‘இந்த பணத்தை வீட்டின் பின் உள்ள கிணற்றில் போட்டு விட்டு வா, உனக்கு உணவு கொடுக்கிறேன்’, என்றார் தந்தை. ஆனால், மகனுக்கோ அழுகை வந்தது. ‘எவ்வளவு கஷ்டப்பட்டு உடல்வலியையும் பொருட்படுத்தாமல், வேலை செய்து பணத்தை சம்பாதித்தித்து வந்துள்ளேன். இவ்வளவு எளிதாக பணத்தை கிணற்றில் போட சொல்கிறீர்களே?’ என அழுதான்.

தந்தை சிரித்து கொண்டே, ‘நேற்றோ, நேற்றைய முன் தினமோ, பணத்தை கிணற்றில் போட, உனக்கு மனம் தடுக்க வில்லை. ஆனால் நீ சம்பாதித்த பணம் என வரும் பொழுது, பணத்தின் மதிப்பு உனக்கு புரிகிறது’ என்றார். இதை உணர்ந்த மகனுக்கு, வாழ்வில் பொறுப்புணர்ச்சி கூடியது.

பணத்தின் மதிப்பு புரியும் பொழுது, அதிக பணம் சம்பாதிக்கும் ஆர்வமும் மேலோங்கும்.


UMA LIFE COACH – Uma, Life Coach

உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.

%d bloggers like this: