நம் கதையின் நாயகன் அஜய், ‘தனக்கு உண்ண உணவு உள்ளது. இருக்க இருப்பிடம் உள்ளது. உடுத்த உடை உள்ளது.’ பின் எதற்காக வாழ்க்கை நோக்கம். இருக்கும் மீதி வாழ்க்கையையும் இப்படியே கழித்து விட்டால் என்ன? பொழுதுபோக எத்தனையோ விஷயங்கள் சுற்றிலும் உள்ளன என நினைத்தார்.
அவருக்கு வாழ்க்கை நோக்கத்திற்காக வாழ்வதன் மதிப்பு தெரியவில்லை.
வாழ்க்கை நோக்கத்திற்காக வாழ்வதன் 5 நன்மைகள்! ( 5 Benefits of Living for the Purpose of Life! ) என்ன என இப்ப பார்க்கலாம்.
குளத்தில் இருக்கும் படகை துடுப்பை கொண்டு தெளிவான இலக்கை நோக்கி செலுத்தினால் தானே, செல்ல வேண்டிய இடத்தை சரியாக அடைய முடியும்?
துடுப்பு இன்றி இலக்கு இன்றி எங்கே செல்கிறோம் என்ற தெளிவு இன்றி குளத்தில் இருக்கும் படகின் பயணம் எப்படி பட்டதாக இருக்கும்?
இது போல தான் வாழ்க்கை பயணமும், நோக்கம் என்ற இலக்கு தெளிவாக இல்லாத வரை வாழ்வில் கிடைக்க வேண்டிய நன்மைகள் தள்ளிப் போகும்.
வாழ்க்கை நோக்கம் தெளிவாக இருக்கும் பொழுது 5 முக்கிய நன்மைகளை பெற முடியும். அவற்றை இப்ப பார்க்கலாம்.
வாழ்க்கை நோக்கம் தெளிவாக இருப்பதால் கிடைக்கும், சொல்லப் போகும் நன்மைகளை புரிந்து தெளிவான வாழ்க்கை நோக்கத்தை உங்களுக்கென உருவாக்குங்க.
5 நன்மைகள் இதோ:
- முதல் நன்மை: குழப்பம் நீங்கிய மன திருப்தி ( Satisfaction )
- இரண்டாவது நன்மை: அதிக செயல் திறன் ( Efficiency )
- மூன்றாவது நன்மை: அதிக வாழ்க்கை பலன்கள் ( High Life Benefits )
- நான்காவது நன்மை: அர்த்தமுள்ள வாழ்க்கை ( Meaningful Life )
- ஐந்தாவது நன்மை: ஆர்வமிக்க வாழ்க்கை பயணம் ( Interesting Life Journey )
முதல் நன்மை: குழப்பம் நீங்கிய மன திருப்தி
எந்த இலக்கை அடைய வேண்டும் என்ற மன தெளிவு வாழ்வில் இருக்கும் பொழுது, ‘எவை தேவை அற்றவை. எவற்றை தவிர்க்க வேண்டும்.’ என்ற தெளிவும் தானாக மனதில் ஏற்பட ஆரம்பிக்கும்.
உதாரணமா,
நீங்க படித்து கொண்டிருக்கும் மாணவராக இருந்தால், எந்த குறிப்பிட்ட வேலைக்கு படித்து முடித்தவுடன் செல்ல? என்ற நோக்கம் உங்களுக்கு மிக தெளிவாக இருக்கும் பொழுது எதனை படிக்க, எதனை தவிர்க்க என்ற எண்ணங்கள் தெளிவாக ஏற்படும்.
இந்த தெளிவு பலவற்றை நினைத்து மனம் குழம்புவதை தவிர்த்து இது தான் வாழ்க்கை நோக்கம் இதற்காக தான் என் பயணம், அதற்காக உழைக்க வேண்டும் என்ற தெளிவை ஏற்படுத்தும். அடிக்கடி பலவற்றை நினைத்து குழப்பமடையும் தேவை இல்லாததால், மன திருத்தியும் தானாக அதிகரிக்கும்.
இரண்டாவது நன்மை: அதிக செயல் திறன்
உறுதியான இலக்கு, நீங்க எதில் focus செய்ய வேண்டும் என்ற தெளிவை உங்களுக்கு கொடுக்கும்.
சிதறாத மன எண்ணங்களால் ஆற்றல் குறைப்பு தவிர்க்கப் பட்டு உங்களினுள் அதிகரிக்கும் energy இலக்கை நோக்கி பயணிக்க உங்களுக்கு செயல் திறனை அதிகரித்திடும்.
உதாரணமா,
என்ன படிக்க வேண்டும்? என்பதில் நீங்க தெளிவுடன் இருக்கும் பொழுது எதனை படிக்க வேண்டும்? என்பதில் உங்களுக்கு focus அதிகரிக்கும். இதனால் உங்க செயல் திறனும் அதிகரிக்கும்.
தேவை அற்றதில் focus செய்து படிப்பதை நிறுத்தி விட்டு தேவையானதில் மட்டும் focus செய்து படிப்பீங்க.
மூன்றாவது நன்மை: அதிக வாழ்க்கை பலன்கள்
செயல் திறன் அதிகரிக்கும் பொழுது தானாக வாழ்க்கை பலன்களும் அதிகரிக்க ஆரம்பிக்கும்.
வாழ்க்கை நோக்கத்தில் தெளிவுடன் அதனை அடைய தினம் நீங்க முயற்சிக்கும் பொழுது தேவை அற்றவற்றை தவிர்க்க ஆரம்பிப்பீங்க. தேவை அற்றதில் செலவிடப் படும் நேரம் தானாக தவிர்க்கப் படும். தேவையானதை மட்டும் தின நேரத்தில் செய்ய செய்ய வாழ்க்கை பலன்கள் அதிகரிக்கும்.
அனைவருக்குமே தினம் 24 மணி நேரம் தான். சிலர் மட்டும் அதிக வாழ்க்கை பலன்களோடு வாழ்வது போல இருக்கும். அவர்கள் நேரத்தை வீணடிப்பது இல்லை. வாழ்க்கை நோக்கத்திற்காக தினம் வாழ்வார்கள்.
அதிக வாழ்க்கை பலன்கள் வேண்டும் எனில் வாழ்க்கை நோக்கத்திற்காக வாழுங்கள்.
நான்காவது நன்மை: அர்த்தமுள்ள வாழ்க்கை
உங்களுடைய செயல் திறன் positive ஆக இருக்கும் பொழுது? உங்களுக்கு கிடைக்கும் வாழ்க்கை பலன்கள், positive ஆக இருக்கும் பொழுது? மனதில் தெளிவும், மன திருப்தியும் இருக்கும் பொழுது? வாழ்க்கை அர்த்தமுள்ளதாக மாறுகிறது.
அர்த்தமுள்ள வாழ்க்கையால் உங்களுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பொறுப்பை நல்ல விதத்தில் செயல் படுத்த வேண்டுமே? என்ற அழுத்தம் மனதில் ஒரு பக்கம் இருந்தாலும் கிடைக்கும் பலன்கள் வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றும். அர்த்தமுள்ள வாழ்க்கை மகிழ்ச்சிக்கு அஸ்திவாரம்.
ஐந்தாவது நன்மை: ஆர்வமிக்க வாழ்க்கை பயணம்
இவை அனைத்தும் உங்களிடம் இருக்கும் பொழுது வாழ்க்கை உங்களுக்கு ஆர்வமிக்கதாக மாறி விடும். வாழ்வின் சுவாரசியம் அதிகரிக்கும். எதனை செய்தாலும் ஏன் எதற்கு என உணர்ந்து ஆர்வத்துடன் செய்வீங்க. அர்த்தமுள்ள வாழ்க்கை பயணத்தில் ஆர்வம் அதிகரிக்கும்.
தெளிவான வாழ்க்கை நோக்கம் உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்தும்.
ஏதோ பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என வாழ்வது வாழ்க்கை இல்லை. விலங்கினம் கூட இதை தான் செய்கிறது. நமக்கு பின்பும், நம் பெயரை இந்த உலகம் சொல்ல வேண்டும். சிறியதோ பெரியதோ, நம்மால் முடிந்த நம்மையை இவ்வுலகிற்கு செய்ய வேண்டும்.
உங்களுக்கு ஒரு உயரிய பலன் வேண்டும் எனில் அதற்கு தேவையான விலையை நீங்கள் செலுத்தி தான் ஆக வேண்டும்!
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.