ஒரு கிராமத்தில் ஜோசியர் ஒருவர் ‘எதிர்காலத்தை கணிப்பதில்’ மிகுந்த புகழ் பெற்று இருந்தார். அவரை பார்க்க கூட்டம் அலை மோதியது. நேரம் போதவில்லை அவருக்கு. இப்படி இருந்த சூழலில், ஒரு நாள் அந்த ஜோசியர், வானத்தில் இருந்த நச்சத்திரங்களை பார்த்துக் கொண்டே, எதிர்காலத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
இவ்வாறு நடந்து செல்லும் பொழுது, தவறுதலாக சாலையில் உள்ள மூட படாத சாக்கடையின் உள் விழுந்து விட்டார். சாக்கடையால் மூச்சி முட்ட, எங்கே இறந்து விடுவோமோ? என்ற பயத்தில், உதவிக்கு ஆட்களை பதட்டத்தில் கதறி அழைத்தார்.
இதனை கண்ட ஊர் மக்கள் வேகமாக ஓடி வந்து, இந்த ஜோசியரை காப்பாற்றினர்.
நிகழ்காலத்தில் வாழாமல், எதிர்காலத்தைப் பற்றியே நினைத்ததால், வாழ்க்கை முடித்துவிடும் சூழலுக்கு ஜோசியர் ஆளானார் என்பதை புரிந்த ஊர்மக்கள், ஜோசியரின் பின் சென்று, எதிர்காலத்தை கணிப்பதை நிறுத்தினர்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.