ஒரு பிரபல தொழிலதிபர், தனக்கு பின் தன் நிறுவனத்தை நிர்வகிக்க, அனைத்து தகுதிகளும் கொண்ட ஒரு இளைஞரை தேர்ந்தெடுக்க விரும்பினார் . தேர்வின் இறுதியில், 10 இளைஞர்களை தகுதி மிக்கவர்களாக அவர் நினைத்தார். இவர்களில் ஒருவரை மட்டும் தேர்ந்தெடுக்க, அனைவரையும் அவர் அழைத்து, ஒவ்வொருவருக்கும் ஒரு விதை கொடுத்தார்.
‘இந்த விதையை நடவு செய்யுங்கள், அதை கவனித்துக் கொள்ளுங்கள், ஒரு வருடத்தில் அதிலிருந்து வளரும் பூவை இங்கு கொண்டு வாருங்கள். யார் மிக அழகான பூவைக் கொண்டுவருகிறாரோ அவர் என் தொழில் நிறுவனத்தின் அடுத்த முதலாளி என்றார்.’
இவர்களில் ஒரு இளைஞர், தனது விதையை ஒரு தொட்டியில் நட்டு, ஒவ்வொரு நாளும் நீர் பாய்ச்சி வந்தார். ஆனால் எதுவும் வளரவில்லை. ஆண்டு இறுதியில், பூக்களை ஆய்வு செய்ய நிர்ணயிக்கப்பட்ட நாளில் அந்த இளைஞன் பூக்கள் இல்லாத தன் பானையை எடுத்து கொண்டு, தொழிலதிபர் சொல்லி இருந்த இடத்திற்கு சென்றார்.
மற்ற எல்லா இளைஞர்களும் வண்ணமயமான, துடிப்பான பூக்களைக் கொண்டு வந்திருந்தார்கள். தொழிலதிபர் அனைவரையும் பார்த்து விட்டு, பூக்கள் இல்லாத பானை கொண்ட இளைஞரின் அருகில் நின்று, ‘நான் உங்கள் அனைவருக்கும் கொடுத்த விதைகள் விளைய கூடியது அல்ல. ஆனால், இந்த இளைஞர் மட்டுமே நியாயத்துடன் பூக்கள் இல்லாத பானையை கொண்டு வந்து, தன் நேர்மையை நிரூபித்து உள்ளார். அதனால், இவரை என் நிறுவனத்தின் அடுத்த முதலாளியாக தேர்ந்தெடுக்கிறேன்.’ என்றார்.
தகுதிகளுடன் கூடிய தொழில் நேர்மை, தொழில் வளர்ச்சிக்கு முக்கியம்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.