ஒரு வயதான மனிதர் அமெரிக்காவில் உடைந்த ஒரு சிறிய வீட்டில் வசித்து வந்தார். சமூக பாதுகாப்பு காசோலைகளில் இருந்து கிடைத்த பணத்தை கொண்டு வாழ்ந்து வந்தார். 65 வயதான அவருக்கு, தன் வாழ்க்கையை மாற்றி எழுத வேண்டும் என்ற விருப்பம் இருந்தது.
அவர் தன் ஆர்வம் என கருதிய ‘கோழி செய்முறையை’ உணவகங்களுக்கு விற்க விரும்பினார். கென்டக்கியை விட்டு வெளியேறி வெவ்வேறு மாநிலங்களுக்கு பயணம் செய்தார். உணவக உரிமையாளர்களிடம், ‘கோழி செய்முறையை வைத்திருக்கிறேன். இந்த செய்முறையை இலவசமாக வழங்குகிறேன். விற்கப்பட்ட பொருட்களின் இலாபத்தில் இருந்து ஒரு சிறிய சதவீதத்தை கொடுங்கள்.’ என கேட்டார் .
துரதிர்ஷ்டவசமாக, அனைத்து உணவக உரிமையாளர்களும் ‘இல்லை’ என கூறினர். 1000 முறைகளுக்கு மேல் ‘இல்லை’ என உணவக உரிமையாளர்கள் சொல்வதை கேட்டார். இத்தனை நிராகரிப்புகளுக்கு பின்பும் அவர் தன் முயற்சியை கைவிடவில்லை. தன் ‘கோழி செய்முறையில் ஒரு சிறப்பு உள்ளது’ என அவர் நம்பினார். தன் 1010 வது முயற்சியில் அவர் வெற்றி பெற்று, அமெரிக்கர்கள் கோழி சாப்பிடும் முறையை மாற்றி அமைத்தார்.
KFC என பிரபலமாக அறியப்படும் கென்டக்கி ஃபிரைடு சிக்கன், கர்னல் ஹார்ட்-லேண்ட் சாண்டர்ஸ் என்ற இந்த வயதானவரால் உலகிற்கு அறிமுகப்படுத்தப் பட்டது.
தொழிலில் வெற்றி பெற இடைவிடாத முயற்சிகள் தேவை.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.