நீங்க பிறந்த பொழுது, இந்த உலகின் சட்டங்கள் என்னவாக இருந்தது என உங்களுக்கு தெரிந்திருந்ததா? தெரிந்திருக்காது. வளர வளர, சமூகத்தின் மூலமாக பல விதிமுறைகளை, உலக சட்டங்களை தெரிந்து இருப்பீங்க.
அவற்றை தெரிந்து கஷ்டங்களை தவிர்க்க சட்டங்களை மதித்து வாழ்ந்து வருவீங்க.
நாட்டிற்கு, இடத்திற்கு தகுந்தவாறு, கால நேரத்திற்கு தக்கவாறு, சமூக சட்டங்கள், விதிமுறைகள் வேறுபட்டு உள்ளது உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் பிரபஞ்ச சட்டம் அப்படி அல்ல. நீங்க பிறப்பதற்கு முன்பும் சரி பின்பும் சரி, உலகின் எந்த மூலைக்கு நீங்க சென்றாலும் பிரபஞ்ச சட்டம் மாறாதது.
சமூக சட்டம் மனிதனால் உருவாக்கப் பட்டது. ஒரு சில சமூக சட்டங்களை மீறினாலும், அதிகாரம், நிர்வகிக்கும் திறமைகளை பயன்படுத்தி சமாளித்துக் கொள்ள வாய்ப்புண்டு. ஆனால் பிரபஞ்ச சட்டம் அப்படி அல்ல. பிரபஞ்ச சட்டங்களை உணர்ந்து, அதற்கு ஒத்திசைந்து வாழும் பொழுது மட்டும் தான், துன்பங்கள் நீங்கி நிரந்தர முன்னேற்றத்தை நோக்கி வாழ முடியும்.
உங்க வாழ்க்கையை மாற்றவல்ல பிரதானமான 9 பிரபஞ்ச சட்டங்களை இப்ப பார்க்கப் போறோம். குறிப்பெடுத்துக்கோங்க.
பிரபஞ்சத்தில் அனைத்தும் ஒன்றுக்கொன்று தொடர்புடன் ஈர்க்கப்பட்டுக் கொண்டு உள்ளது.
இந்த ஈர்ப்பின் காரணமாக ஒரு இடத்தில் ஏற்படும் மாறுதல் வேறொரு இடத்தில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. நீங்க நேர்மறையாக சிந்திக்கும் பொழுது மட்டும் தான் நேர்மறையான விஷயங்களை இந்த பிரபஞ்சத்தில் இருந்து ஈர்க்க முடியும்.
உங்க ஆழ்மனத்தில் பதிந்துள்ள தகவல்களின் அடிப்படையிலேயே உங்க வாழ்க்கை அமையும். உங்க கட்டுக்குள் இல்லாத வாழ்வின் பல முக்கிய செயல்பாடுகளை உங்க ஆழ்மன பதிவுகளே நிர்ணயிக்கின்றன. ஆழ்மன பதிவுகளுக்கு மதிப்பு கொடுத்து வாழுங்க.
ஒவ்வொரு செயலுக்கும் விளைவு உண்டு. எந்த நோக்கத்தில், ஒரு செயலை செய்தீர்களோ? அதற்கான விளைவுகள் கண்டிப்பாக உண்டு. நல்ல செயலுக்கு நல்ல விளைவுகள் கிடைக்கும். தீய செயலுக்கு தீய விளைவுகள் கிடைக்கும். இந்த நேரத்தில் தான் விளைவுகள் ஏற்படும் என சொல்ல முடியாது. பிரபஞ்ச சக்தியின் விருப்பம் அது. செயலுக்கான விளைவு, எந்த காலகட்டத்தில் வேண்டுமானாலும் ஏற்படலாம். ஆனால் கண்டிப்பா விளைவு ஏற்படும்.
உங்களை குணப்படுத்திக் கொள்ளும் ஆற்றல் உங்களின் உள்ளேயே உள்ளது. மன காயங்களையும், உடல் காயங்களையும் சரிபடுத்திக்கொள்ளும் சக்தியை உங்களின் உள் இயற்கை வழங்கி உள்ளது. இயற்கைக்கு முழுவதுமாக ஒத்துவாழும் பொழுது உங்களுக்கு நீங்களே குணப் படுத்தி கொள்வது சாத்தியப் படும்.
உங்களுக்கு ஏற்படும் நல்லது மற்றும் கெட்டது அனைத்திற்கும் நீங்கள் மட்டுமே பொறுப்பாக முடியும். நீங்கள் ஏற்கனவே செயல்படுத்திய முடிவின் காரணமாக தான் இன்றைய நல்லதும் கெட்டதும் உங்களுக்கு அமைந்துள்ளது.
உங்களுக்கு ஏற்படும் துன்பம் தண்டனை அல்ல. எது செய்தால் துன்பம் ஏற்படும் என புரிந்து, அதனை நீங்கள் திருத்தி வாழ, இயற்கை ஏற்படுத்தும் வழிகாட்டல்.
ஒவ்வொரு உயிரினமும் தனித்துவமான நோக்கத்திற்காக ( Life Purpose ) வாழ்கிறது.
பிரபஞ்சதிற்கு முரண்படாமல் செயல்படும் பொழுது மட்டுமே வாழ்வில் நல்ல மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இந்த பிரபஞ்சத்தில் உங்களுக்கு தேவையான அனைத்துமே உள்ளது. பிரபஞ்சம் கொடுத்துக் கொண்டும் உள்ளது, பிரபஞ்சதிற்கு முரண்படாமல், பிரபஞ்சம் கொடுக்கும் வாய்ப்பை விழிப்புடன் உணர்ந்து, பயன்படுத்தும் பொழுது, வாழ்வில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தலாம்.
பிரபஞ்ச சட்டத்தின் முன் சமுதாய சட்டமோ, மனித சட்டமோ போட்டிபோட முடியாது. இதை உணர்ந்து பிரபஞ்ச சட்டத்தை மதித்து வாழ்வோம்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.