காட்டில் ஒரு நாள், மர வெட்டிகள் இருவர் வாதத்தில் ஈடுபட்டனர். இருவரில் எவரால் அதிக மரங்களை வெட்ட முடியும்? என்பது தான் விவாதம். இருவரும் இதனை ஒரு சவாலாக ஏற்றுக் கொண்டு, அடுத்தநாள் போட்டியில் இறங்கினர்.
இருவரும் ஒரே வேகத்தில் மரங்களை வெட்ட ஆரம்பித்தனர். ஒரு மணி நேரத்திற்கு பின்பு, இருவரில் ஒருவர் மரம் வெட்டுவதை நிறுத்தி விட்டார். இது தனக்கு கிடைத்த வாய்ப்பு என்பதை உணர்ந்த முதல் மர வெட்டி இரட்டை முயற்சிகளை செய்து மரங்களை வெட்ட தொடங்கினார்.
பத்து நிமிடங்கள் கடந்துவிட்டது. இரண்டாவது மர வெட்டி மீண்டும் வேலை செய்ய ஆரம்பித்தார். அவர்கள் இருவரும் கிட்டத்தட்ட ஒத்திசைவாக வேலை செய்து கொண்டிருந்தனர். முதல் மர வெட்டி, அவரது போட்டியாளர் மீண்டும் மரம் வெட்டுவதை நிறுத்தி விட்டதை உணர்ந்தார். முதல் மர வெட்டிக்கு, தான் வெற்றி பெற்று விடுவோம் என்ற நம்பிக்கை அதிகரித்தது.
இதே போல நாள் முழுவதும் நீடித்தது. ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு முறை இரண்டாவது மர வெட்டி பத்து நிமிடங்கள் மரம் வெட்டுவதை நிறுத்திவிட்டார். முதல் மரவெட்டி தொடர்ந்து வேலை செய்து கொண்டே இருந்தார். நேரம் காலாவதியான போது, எந்தவொரு சந்தேகமும் இன்றி, தனக்கு தான் வெற்றி என முதல் மரவெட்டி முழுவதுமாக நம்பினார்.
ஆனால், உண்மையாக என்ன நடந்தது? என பார்க்கும் பொழுது, ‘தான் நினைத்தது முற்றிலும் தவறு’ என முதல் மர வெட்டி உணர்ந்தார்.
கூட்டாளியிடம், ‘இது எப்படி சாத்தியம்? ஒவ்வொரு மணி நேரத்திற்கு ஒரு தரம், நீங்கள் பத்து நிமிடங்கள் வேலையை நிறுத்திவிட்டீர்கள். என்னை விட அதிக மரங்களை எப்படி வெட்ட முடியும்? அது முடியாத காரியம்!’ என கேட்டார்.
அதற்கு இரண்டாவது மர வெட்டி, ‘ஒவ்வொரு மணி நேரமும் நான் பத்து நிமிடங்கள் வேலையை நிறுத்தினேன். நீங்கள் மரங்களை வெட்டும்போது, நான் கோடாரியைக் கூர்மைப்படுத்தினேன். அதனால் இது மிக எளிதாக சாத்தியப் பட்டது’ என்றார்.
அதிக நேர கடின உழைப்பை விட, குறைவான நேரத்தில் சரியாக உழைப்பதே புத்திசாலித்தனம். அதிக பலன் கிடைக்கும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.