சம்பூர்ணம் கிராமத்திற்கும், நாயக்கபுரம் கிராமத்திற்கும், அரசாங்கம் ஒரே அளவிலான நிதியை, கிராமபுற வளர்ச்சிக்காக வழங்கியது. இரண்டு கிராமங்களும் அருகருகே இருந்தன. இரு கிராம தலைவர்களும் நண்பர்கள். வளர்ச்சியற்ற தன் கிராமங்களை, வளமிக்க கிராமங்களாக மாற்ற வேண்டும் என்பது இருவருடைய ஆசைகளாக இருந்தது.
இருவரும் ‘3 வருடங்களில் அவரவர் கிராமத்தை செழிப்பாக மாற்றுவது, 3 வருடங்கள் முடியும் வரை ஒருவரை ஒருவர் சந்திப்பது இல்லை’ என முடிவெடுத்தனர். 3 வருடங்கள் கடந்தது. சம்பூர்ணம் கிராமம், நாயக்கபுரம் கிராமத்தை விட அனைத்து விதங்களிலும் சிறப்பாக இருந்தது.
இதனை கண்ட நாயக்கபுரம் கிராம தலைவர், ஆச்சரியத்தில் அசந்து போனார். எப்படி இது சாத்தியம் ஆனது? என, சம்பூர்ணம் கிராம தலைவரிடம் கேட்டார்.
அதற்கு, சம்பூர்ணம் கிராம தலைவர் கூறிய பதில்! ‘செயல் திட்டம்’.
கிராமத்தை 3 ஆண்டுகளில் எப்படி எல்லாம் மாற்ற வேண்டும் என்ற செயல் திட்டத்தை, குறிக்கோளை செயல்படுத்த ஆரம்பிக்கும் முன்னரே, சரியான சிறப்பான விதத்தில் திட்டமிட்டேன். அதனால், நினைத்ததை செயல்படுத்தி, பலன் காண முடிந்தது என்கிறார்.
குறிக்கோளை அடைய பல பாதைகள் உண்டு. அடைய தேவையோ ‘செயல் திட்டம்’!
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.