இரவு உறக்கத்தில் திருப்தி இல்லாத பொழுது, காலை எழும் பொழுது சோர்வாக இருக்கும். இதனை தடுக்க, 10 வழிமுறைகள் இருக்கு. அவற்றை இப்ப பார்க்கப் போறோம். குறிப்பெடுத்துக்கோங்க.
நீங்க படுக்கும் மெத்தை சரி இல்லாமல் இருப்பது இரவு உறக்கத்தில் இடைஞ்சலை ஏற்படுத்தும்.
நீங்க உறங்கும் room மிக வெட்பமாகவோ அல்லது குளிராகவோ இருந்தால் இரவு உறக்கம் தடைபடும்.
சப்தம் அல்லது வெளிச்சம் உள்ள இடத்தில் உறங்குவது, இரவு படுக்க செல்லும் முன்பு coffee அருந்துவது, செல்போன் பயன்படுத்த அல்லது வேறு காரணங்களுக்காக அடிக்கடி இரவு எழுவது இவை போன்ற செயல்களால் உறக்கம் தடைபடும்.
இரவு உறக்கதிற்கு இடைஞ்சல்களை ஏற்படும் செயல்கள் என்ன? என யோசித்து தடுத்திடுங்க.
மன அழுத்தத்துடனும் எதிர்மறை எண்ணங்களுடனும் படுக்க செல்லாதீங்க.
முதல் அலாரத்திற்கே எழுந்துவிடும் பழக்கம், காலை எழுந்தவுடன் முகம் கழுவுவது, காலை உடற்பயிற்சி செய்வது இது போன்ற பழக்கங்கள் சோர்வில் இருந்து மீள பயன்படும்.
உங்களுடைய நடைமுறை பழக்கங்கள் ஆரோக்கிய பழக்கங்களா? என யோசித்து ஆரோக்கிய தின பழக்கங்களை கொண்டிருங்க.
அதிக அளவில் சாப்பிட்ட உடனே இரவு உறங்க செல்லும் பொழுது உறக்கம் தடைபடும்.
6 மணி நேர உறக்கம் போதுமானதாக சிலருக்கு இருக்கும். ஆனா சிலருக்கு 8 மணி நேர உறக்கம் தேவைப்படும். சரியான நேர அளவில், இரவு உறக்கம் உள்ளதா? என பாத்துக்கோங்க. தேவைப் படும் உறக்க அளவிற்கு முன்பே எழும் பழக்கத்தால் காலை சோர்வு இருக்கும்.
‘ஆழ்ந்த இரவு உறக்கம்’ காலை சோர்வாக எழுவதை தடுக்கும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.