கவன சிதறலை தடுப்பது எப்படி? | How To Avoid Distractions While Studying in Tamil | AsK LIFE Motivation

Increase Concentration Tamil Quote

ஒரு மர பறவையை, கிளையின் மேல்  வைத்து, தன் மாணவர்கள் அனைவருக்கும் ஒரு எளிய சோதனை வைக்க துரோணாச்சார்யா முடிவு செய்தார். மாணவர்களிடம் அவர், பறவையின் கண்ணைத் தாக்க சொன்னார். இதனை மாணவர்கள் செய்ய ஆரம்பிக்கும் முன், அவர் ஒவ்வொருவரிடமும் ”அங்கே நீங்கள் என்ன பார்க்கிறீர்கள்? ”  என்ற கேள்வியை கேட்டார்.

அதற்கு யுதிஷ்டீர், ‘நான் ஒரு மர பறவை, கிளை, மரம், நகரும் இலைகள் மற்றும் பிற பறவைகளைக் காண்கிறேன்’ என்று பதிலளித்தார். அவரை தொடர்ந்த அனைவருமே, ‘மரம், கிளை, பறவை, இலைகள் போன்றவற்றை’ குறிப்பிட்டனர். துரோணாச்சார்யா, அவர்கள் அனைவரையும், அவரவர் வில் மற்றும் அம்புகளை கீழே போடச் சொன்னார். 

அர்ஜுனனை அழைத்து இதே கேள்வியை கேட்டார். ‘பறவையின் கண்ணை மட்டுமே என்னால் பார்க்க முடிகிறது.’ என அர்ஜுனன் கூறினான். அர்ஜுனன் சரியாக சொன்னதால், துரோணாச்சார்யா சிரித்தார். ‘ பறவையின் கண்னை தவிர மற்ற அனைத்தையும்’ தங்கள் கண்களால்  மற்ற மாணவர்கள் பார்த்தனர்.  ஆனால் அர்ஜுனன் மட்டும், ‘பறவையின் கண்னை’ தன் கண்களால் பார்த்தான்.

‘இலக்கை நோக்கி தனது கவனத்தை நெறிப்படுத்தும்’ அர்ஜுனனின் திறன் பற்றிய கதை இது.

அர்ஜுனனும் மற்ற மாணவர்களைப் போலவே இருந்தார். ஆனால், அவரை பிற மாணவர்களிடம் இருந்து வேறுபடுத்தி காட்டியது, ‘அவருடைய ஆழ்மன விருப்பம் மற்றும் இலக்கில் கவனத்தை நெறி படுத்தும் உறுதி தன்மை’. 

 ‘அளவற்ற ஆழ்மன ஆசை’, செய்யும் செயலின் மேல் இருந்தால், தானாக கவன கூர்மை அதிகரிக்கும்.


UMA LIFE COACH – Uma, Life Coach

உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.

%d bloggers like this: