கடினமான விஷயங்களை விரும்பி செய்வது எப்படி? How To Like Doing Hard Things in Tamil | AsK LIFE Motivation

Like Doing Hard Things Tamil Quotes

தேவையின் காரணமாக, ஒரு விஷயத்தை செய்ய வேண்டிய சூழல் உங்களுக்கு ஏற்படும் பொழுது, விஷயம் எளிதான விஷயமாக இருந்தாலும், உங்களுக்கு விருப்பம் இல்லாத பொழுது அந்த விஷயம் கடினமான விஷயமாக மாறிவிடுகிறது.

நீங்க கடினமாக நினைக்கும் அந்த விஷயத்தை யாரோ ஒருவர் எளிதாக இவ்வுலகில் செய்து கொண்டு தான் இருக்கிறார். அவரால் எளிதாக எப்படி செய்ய முடிகிறது? அந்த செயலை செய்ய அவரிடம் விருப்பமும், திறமையும்,தைரியமும் இருக்கிறது.

திறமையும், தைரியமும் இல்லாமல் போனாலும் விருப்பம் என்ற ஒன்றை கொண்டு திறமையை வளர்த்துக் கொள்ளலாம். தைரியத்தையும் வரவழைத்துக் கொள்ளலாம். ஏனெனில், கற்க முடியாத திறமை ( personality ) என ஒன்று இவ்வுலகில் இல்லை. திறமையை கற்க கற்க தைரியம் தானாக அமைந்து விடும். தேவையோ, மனதில் விஷயத்தைப் பற்றிய அபிரிதமான விருப்பம் மட்டும் தான்.

திறமையும் தைரியமும் இருந்தும் கூட விருப்பம் இல்லாமல் போனால்? எளிதான விஷயத்தை கூட கடினமாக நினைக்க ஆரம்பித்திடுவீங்க.

அதனால், நீங்க கடினமாக நினைக்கும் விஷயத்தை ‘அதிகமாக விரும்பனும்’ என்ற முடிவை முதலில் மனதில் எடுங்க.

எந்த அளவு உங்களுக்கு தைரியமும் திறமையும் ஒரு விஷயத்தில் குறைவோ, அந்த அளவு அதிகப்படியாக அந்த விஷயத்தை விரும்ப ஆரம்பிங்க. 

இப்பொழுது விஷயத்தை விருப்பத்தோடு செய்வது எப்படி? என பார்க்கலாம். குறிப்பெடுத்துக்கோங்க.

கடினமான விஷயத்தை நீங்க மனதில் நினைக்கும் பொழுது எவ்விதமான உணர்ச்சிகள் உங்களின் உள் ஏற்படுகிறது? என யோசித்துப் பாருங்க. எதிர்மறை உணர்வுகள் இயற்கையாகவே உங்களின் உள் ஏற்படும்.

“கடினமான விஷயங்கள் எனில், எதிர்மறை உணர்வுகள்” என ஏற்கனவே மனதில் நன்கு மனதில் பதிந்து இருக்கும். இனி, கடினமான விஷயங்களை மனதில் நினைக்கும் பொழுதெல்லாம், “நீங்க நன்கு விஷயத்தை விரும்பினால், எப்படிபட்ட நேர்மறை உணர்வுகளை வெளிப் படுத்துவீர்களோ? அப்படி பட்ட உணர்வுகளை மனதார விரும்பி செயற்கையாக வெளிப்படுத்த ஆரம்பிங்க.”

பிடிக்காத பாட புத்தகத்தை 10 நிமிடங்கள் படிக்க கூட மிக கடினமாக உணரும் மன உணர்வை ‘பிடித்த உணவுகளை சாப்பிடும் பொழுது, பிடித்த games ஐ cell phone ல் விளையாடும்  பொழுது, பிடித்த நிகழ்ச்சிகளை TV யில் பார்க்கும் பொழுது’, என்ன மன உணர்வில் இருப்பீர்களோ? அந்த மன உணர்விற்கு மாற்றுங்க.

இதுபோல, கடினமான விசயத்திற்கு இந்த யுக்தியை திரும்ப திரும்ப ‘செயற்கையாக’, நீங்க பயன்படுத்த ஆரம்பிக்கும் பொழுது, “அந்த விசயத்திற்கான திறமையை மேம்படுத்தி, செயலில் ஈடுபடும் எண்ணமும், தைரியமும்” நாட்பட ‘இயற்கையாகவே’ உங்களுக்குள் ஏற்பட ஆரம்பித்து விடும். விஷயத்தை நிஜமாகவே விரும்பி செய்ய ஆரம்பித்திடுவீங்க.

இந்த யுத்தியை தின வாழ்வில் செயல்படுத்தி பாருங்க. கடினமான விஷயத்தை விரும்பி செய்ய ஆரம்பித்து, உங்க செயல்திறனை அதிகரித்திடுவீங்க.

முடியாமல் போக என்ன காரணங்கள்? என்பதில் கவனம் செலுத்துவதை விட்டு விட்டு, முடித்துவிட என்ன காரணங்கள் உள்ளது? என்பதில் கவனத்தை செலுத்துங்க.     

UMA LIFE COACH – Uma, Life Coach

உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.