நீங்க ஒன்றை செய்ய ஆசைப்பட்டு அதற்கான திட்டங்களும் உங்களிடம் இருந்து ஆனால் செயல்படுத்த முடியவில்லை! என்ற சூழல் இருந்தால் உங்களிடம் சுய ஒழுக்கம் குறைவாக உள்ளது என நீங்க உணரலாம்.
சுய ஒழுக்கத்தை மேம்படுத்த 6 படிகள் இருக்கு. அவற்றை இப்ப பார்க்கலாம்.
குறிப்பெடுத்துக்கோங்க.
உங்களுடைய திட்டப்படி நீங்க செயல்பட ஆரம்பிக்கும் பொழுது, கட்டுப்பாட்டை இழக்க நேரும் கணம் நீங்க என்ன செய்தால்? எந்த விதத்தில் உங்களை நீங்களே ஊக்குவித்தால்? தொடர்ந்து செயலை செய்ய முடியும் என யோசித்துப் பாருங்க. சுய ஊக்குவிப்புக்கு தேவையானதை செய்ய ஆரம்பிங்க.
நீங்க செயல்படும் சூழல் உங்க கவனத்தை ( stay focused ) திசை திருப்பும் சூழலாக இருந்தால் சூழலை மாற்றுங்க. சுய ஒழுக்கம் மேம்படும்.
எந்த நோக்கமும் இல்லாதபொழுது எந்த திசையை நோக்கி பயணிக்க என தெரியாது. சுய ஒழுக்கம் தவறும். சுய ஒழுக்கத்துடன் ஏன் இருக்கனும்? என்ற நோக்கத்தை உருவாக்குங்க.
செய்ய வேண்டிய செயல் பிரமிப்பை ஏற்படுத்தும் அளவு பெரியதாக தெரிந்தால் செயல் செய்ய ஆரம்பிக்கும் பொழுதே தடுமாற்றம் ஏற்படும். செயல் பெரியதாக இருந்தாலும் சிறிது சிறிதாக செயலை பிரித்து வரிசை படுத்தி செய்யும் பொழுது சுய ஒழுக்கத்துடன் செயலை செய்து முடித்து விடலாம்.
சரியான அளவு உறக்கம், சரியான நேரத்தில் உணவருந்துதல் போன்றதை சரியாக செய்து நல்ல தின வாழ்க்கை முறையை நீங்க அமைத்துக் கொள்ளும் பொழுது சுய ஒழுக்கம் மேம்படும்.
சுய கட்டுப்பாட்டுடன் விடா முயற்சி உங்களிடம் இருக்கும் பொழுது இது சாத்தியப் படும்.
இவற்றை நீங்க திரும்ப திரும்ப செயல்படுத்த பழக்கமாக மாறிடும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.