நீங்க உங்க தினத்தை எப்படி ஆரம்பிக்கறீங்களோ! அதை பொறுத்து தான் அன்றைய தினம் உங்களுக்கு அமையும்.
பெரும்பான்மையான முக்கிய வேலைகளை தினத்தின் ஆரம்பத்தில் முடித்தீர்கள் எனில் நீங்க பெறும் பயன் அதிகமாக இருக்கும்.
அதிகாலையை நீங்க உங்களுக்கு பயனை தரும் முக்கியமான நல்ல விஷயங்களை செய்து ஆரம்பிங்க.
அதிகாலையில் கண்டிப்பாக ‘செய்யக்கூடாத’ 7 விஷயங்களை பற்றி இப்ப பார்க்கப் போறோம்.
குறிப்பெடுத்துக்கோங்க.
இரவு படுக்க செல்லும் பொழுது அடுத்தநாள் எந்த time எழுந்திரிக்கலாம்? என்ற முடிவுடன் படுக்க போவீங்க. காலை alarm அடிக்கும் பொழுது முதல் அலார ஓசையை நிறுத்தி விட்டு சிறிது நேரம் உறங்குவது. பின், இரண்டாவது அலார ஓசையை நிறுத்தி விட்டு சிறிது நேரம் உறங்குவது என சிறிது சிறிது நேரமாக அதிக நேரம் உறங்கிக்கொண்டே இருப்பது செய்யக் கூடாத செயல். முதல் அலாரத்திற்கே எழுந்துவிடும் பழக்கத்தை ஏற்படுத்திக்கோங்க.
அதிகாலை உறக்கத்தில் இருந்து எழுந்துவிட்டு தேவையற்று படுக்கையிலே சில நேரம் படுத்து நேரத்தை கழிப்பது செய்யக் கூடாத செயல். மனதின் சுறுசுறுப்பை குறைத்து நேரத்தை வீணடிக்கும் செயல் இது.
எழுந்தவுடன் தினத்தை எப்படி தொடங்கறீங்க? பயனற்ற வலைதள தவவல்களை பார்ப்பது பயனற்ற பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை TV யில் பார்க்க ஆரம்பிப்பது, games விளையாடுவது, இவை போல பயனற்ற செயல்களை செய்து தினத்தை ஆரம்பிக்காதீங்க.
எழுந்த உடனே பல் துலக்காமல் காபி போன்ற பானத்தை அருந்துவது அல்லது பல் துலக்காமல் உணவு உண்பது செய்யக் கூடாத செயல்.
காலை உணவை உண்ணாமல் தவிர்த்து விடும் பழக்கம் அல்லது காலை வெறும் வயிற்றில் சர்க்கரை சார்ந்த பொருட்களை உண்பது உடலுக்கு கேடு ஏற்படுத்தும் செய்யக் கூடாத செயல்கள்.
அன்றைய தினத்தின் செய்ய வேண்டிய செயல்கள் பற்றிய பட்டியலை காலை எழுந்தவுடன் எழுதுவது, செய்யக் கூடாத செயல். காலையில் பட்டியலை எழுதும் பொழுது வேலையை ஆரம்பிப்பதற்கு பதில் பட்டியலை எழுதி கொண்டிருப்பீங்க. வேலையை ஆரம்பிக்க தாமதமாகிடும். பட்டியலை முந்தய நாள் இரவே எழுதிவிட்டு தூங்க போங்க.
உடற்பயிற்சி செய்யாமல் தவிர்ப்பதும் செய்யக் கூடாத செயல் தான்! உடல் ஆரோக்கியத்தை கெடுக்கும் செயல் இது.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.