சாக்ரடீஸ், உலக புகழ் பெற்ற தத்துவ மேதை. ஒரு நாள் சாக்ரடீஸுக்கு பரிச்சயமான ஒரு நபர், “உங்கள் நண்பரை பற்றி ஒரு விஷயம் கேள்விப்பட்டேன். அதை பற்றி உங்களுக்கு தெரியுமா?” என சாக்ரடீஸிடம் கேட்டார்.
அதற்கு சாக்ரடீஸ், “ஒரு நிமிடம் இருங்கள். நீங்கள் என் நண்பரைப் பற்றி என்னிடம் பேசுவதற்கு முன், நான் உங்களிடம் மூன்று கேள்விகளை கேட்க்கிறேன். நீங்கள் அதில் தேர்ச்சி பெற்றால், நான் நீங்கள் சொல்ல வருவதை கேட்கிறேன்.” என்றார்.
முதல் கேள்வியாக, ” நீங்கள் என்னிடம் சொல்லப்போவது ‘உண்மை’ என்று நீங்கள் உறுதியாக நம்பியிருக்கிறீர்களா? ” என சாக்ரடீஸ் கேட்டார். அதற்கு அந்த நாபர், “உறுதியாக தெரியவில்லை. நான் அதனைப் பற்றி கேள்விப்பட்டேன்.” என்றார்.
“எனவே, இது உண்மையா? இல்லையா? என்பது உங்களுக்குத் தெரியாது. சரி, இப்போது இரண்டாவது கேள்வி, என் நண்பரைப் பற்றி நீங்கள் என்னிடம் சொல்லப்போவது ஒரு நல்ல விஷயமா?”
“இல்லை, மாறாக …” என்றார் நண்பர்.
சாக்ரடீஸ் தொடர்ந்தார், “நீங்கள் என் நண்பரைப் பற்றி மோசமாக, ஏதோ ஒன்றை சொல்ல விரும்புகிறீர்கள், ஆனால் அது உண்மை என்று உங்களுக்கு உறுதியாக தெரியாது.”
“நீங்கள் தேர்ச்சி பெற, ஒரு கேள்வி மீதமுள்ளது. நீங்கள் சொல்ல வரும் விஷயம் எனக்கு பயனுள்ளதாக இருக்கும் என நினைத்து இந்த விஷயத்தை என்னிடம் சொல்ல வருகிறீர்களா?” என்றார் சாக்ரடீஸ்.
“இல்லை, அப்படி இல்லை….” என்றார் நண்பர்.
“நீங்கள் என்னிடம் சொல்ல விரும்புவது உண்மை அல்ல, நல்லதல்ல, பயனுள்ளதல்ல என்றால், அதை ஏன் என்னிடம் சொல்ல விரும்புகிறீர்கள்?” என்று கேட்டார் சாக்ரடீஸ்.
வதந்திகளை கிசுகிசுத்து, உங்களுடைய நேரத்தையும், ஆற்றலையும் வீணடிப்பது மட்டும் இன்றி கேட்பவர் நேரத்தையும், ஆற்றலையும் வீணடிக்காதீர்கள்! என்றார் சாக்ரடீஸ்.
நேரமும், ஆற்றலும் மதிப்பு மிக்கது. இதனை உணரும் பொழுது, ஒவ்வொரு நொடியும், ஆற்றலும், முக்கியம் என மனம் உணரும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.