உங்க தின 24 மணிநேர செயல்பாடுகள் எப்படி இருக்கனும்? உங்க வாழ்நாள் செயல்பாடுகள், வாழ்க்கை திருப்பங்கள் எப்படி இருக்கனும்? என்பதை நிர்ணப்பத்தில், ‘தினத்தின் தொடக்க செயல்பாடுகளின்’ பங்கு மிக முக்கியம்.
நீங்க, ஒவ்வொரு நாளையும் எப்படி தொடங்கறீங்க? என யோசித்துப் பாருங்க.
‘3 விதமான முக்கிய தின தொடக்க செயல்பாடுகளுக்கு’ வெற்றியாளர்கள் முக்கியத்தும் கொடுப்பாங்க.
இவற்றில் உங்களால் முடிந்த செயல்பாடுகளுக்கு நீங்களும் முக்கியத்துவம் கொடுங்க. இந்த 3 விதமான செயல்பாடுகள் என்ன? என இப்ப பார்க்கலாம்.
முதலாவது, உடற்பயிற்சி. நடை பயணமாக இருக்கலாம். யோகா வாக இருக்கலாம். உடற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி எடுப்பதாக இருக்கலாம். ஏதோ ஒரு விதத்தில் உடற்பயிற்சியை நீங்க பின்பற்றி, தினத்தை ஆரம்பிக்கும் பொழுது உங்க உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வு கிடைக்கும். இதன் தாக்கம், அன்றைய நாள் முழுவதும் இருக்கும். தினம் குறைந்தது, ’20 ல் இருந்து 30 நிமிடங்கள்’ ஆவது உடற்பயிற்சி செய்யுங்க.
இரண்டாவது, தியானம். ( meditation )உங்களுடைய மனதை அடுத்த நிலைக்கு மேம்படுத்துவது தியானம். இதனால், அன்றைய தினம் உங்களுக்கு சிறப்புடையதாக அமையும். குறைந்தது 10 ல் இருந்து 20 நிமிடங்கள் ஆவது தின காலை தொடக்கத்தில் தியானம் செய்யுங்க.
மூன்றாவது, கற்றல். தின தொடக்கத்தில் உங்களுடைய துறையில் குறைந்தது 20 நிமிடங்கள் ஆவது புதியதான கற்றல் உங்களுக்கு இருக்கும் பொழுது வாழ்க்கை மாற்றத்தை உங்களால் உணர முடியும்.
இந்த மூன்று செயல்பாடுகளும் உங்களுடைய வாழ்நாளை அதிகரித்து மனதை பக்குவப் படுத்தி உலக சூழலை எதிர்கொண்டு வெற்றி அடைய, உங்களுக்கு ‘தெம்பை, அறிவை’ கொடுக்கும். பின்பற்றுங்க. சிறப்பாக வாழ்ந்து காட்டுங்க.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.