ஜென் ஆசிரியர் ஒருவர் தன் மாணவர்களுக்கு அம்பினை கொண்டு இலக்கை நோக்கி எய்த, ஒரு புதிய நுட்பத்தை சொல்லி தர விரும்பினார்.
தன் கண்களை ஒரு துணியால் மறைக்கும்படி தனது மாணவர்களிடம் சொன்னார். பின்னர் அவர் அம்புகளை எய்தினார். அவர் கண்களைத் திறந்த போது, அதில் எந்த அம்புகளும் இல்லாத இலக்கைக் கண்டார். அவர் தனது மாணவர்களைப் பார்த்த போது, ஆசிரியர் இலக்கை தவறவிட்டதால் மாணவர்கள் தலை குனிந்து நின்றனர்.
ஜென் ஆசிரியர் அவர்களிடம், “இன்று உங்கள் அனைவருக்கும் என்ன கற்பிக்க நான் விரும்புகிறேன் என நீங்கள் நினைக்கிறீர்கள்?” என கேட்டார். அதற்கு அவர்கள், “இலக்கைப் பார்க்காமல் எப்படி அம்பை எய்துவது என்பதை எங்களுக்குக் காண்பிப்பீர்கள் என நாங்கள் நினைத்தோம்.” என்றனர்.
ஆசிரியர் அவர்களிடம், “இல்லை, நீங்கள் வாழ்க்கையில் வெற்றிபெற விரும்பினால், இலக்கை காண மறந்துவிடாதீர்கள்! என நான் இப்பொழுது உங்களுக்கு கற்பித்தேன். நீங்கள் இலக்கின் மீது எப்பொழுதும் ஒரு கண் வைத்திருக்க வேண்டும், இல்லையெனில் வாழ்க்கையில் ஒரு நல்ல வாய்ப்பை நீங்கள் இழக்க நேரிடும்.” என கூறினார்.
இலக்கு இல்லாத கவனம், எவ்விதத்திலும் பயன்படாது.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.