சோம்பேறித்தனத்தை போக்குவது எப்படி? ( How To Stop Being Lazy? ) என இப்ப பார்க்கலாம்.
நீங்க தினம் செய்யும் செயல்களை, வாழ்வில் இதுவரை செய்த முக்கிய செயல்களை யோசித்துப் பாருங்க. அனைத்து செயல்களிலும் lazy ஆக இருக்கிறீர்களா என்ன? கண்டிப்பாக கிடையாது.
சில விஷங்களை மிக சுறு சுறுப்பாக செய்திருப்பீங்க. மேலும் சில விஷங்களை மிக சுறு சுறுப்பாக செய்து கொண்டும் இருப்பீங்க.
ஒரு விஷயத்தை நீங்க “போதுமான சுய உந்துதல் இல்லாமல் செய்ய” முற்படும் பொழுது, உங்களுக்கு சோம்பேறித்தனம் இருப்பது போல இருக்கலாம். எந்த விஷயத்தில் உங்களுக்கு சோம்பேறித்தனம் இல்லாம வேண்டுமோ அந்த விஷயத்திற்கு சுய உந்துதல் ( Self Motivation ) கண்டிப்பா தேவை.
இந்த self motivation உடன் சுறு சுறுப்பாக விஷயத்தை அணுக, சொல்லப் போகும் 10 குறிப்புகளை குறிப்பெடுத்து, தின வாழ்வில், செயல் படுத்துங்க.
10 முக்கிய குறிப்புகள் இதோ:
- முதல் குறிப்பு: கிடைக்கவிருக்கும் பலன்களை ஆழ்ந்து கற்பனை செய்தல் ( Deeply Imagine The Benefits )
- இரண்டாவது குறிப்பு: செயல்பாடுகளில் நிர்வாக திறமையை மேம்படுத்துதல் ( Improving Management Skills )
- மூன்றாவது குறிப்பு: செய்வது எளிதென விஷயத்தை அணுகுதல் ( Easy To Do )
- நான்காவது குறிப்பு: கவனச் சிதறலை தடுத்தல் ( Avoid Distraction )
- ஐந்தாவது குறிப்பு: உடலையும் மனதையும் எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்திருத்தல் ( Keep Your Body and Mind Active )
- ஆறாவது குறிப்பு: வாழ்க்கை நோக்கத்தில் தெளிவுடன் இருத்தல் ( Purpose of Life )
- ஏழாவது குறிப்பு: விளைவுகளை நினைத்துப் பார்த்தல் ( Think About The Effect )
- எட்டாவது குறிப்பு: ஒரு நேரத்தில் ஒரு செயல் ( One Action At A Time )
- ஒன்பதாவது குறிப்பு: உறுதிமொழி எடுத்தல் ( Affirmation )
- பத்தாவது குறிப்பு: தள்ளிப் போடும் பழக்கத்தை நிறுத்துதல் ( Stop Procrastination )
முதல் குறிப்பு: கிடைக்கவிருக்கும் பலன்களை ஆழ்ந்து கற்பனை செய்தல் ( Deeply Imagine The Benefits )
விஷயத்தை செய்வதால் கிடைக்க விருக்கும் பலன்கள் உங்களுக்கு மனதில் புரிந்து இருந்தாலும், உணர்வு பூர்வமாக அதனை மனம் விரும்பி ஏற்காத பொழுது விஷயத்தை அணுக சோம்பேறித்தனம் ஏற்படும்.
உதாரணமா,
‘அதிகாலையில் எழுவது நல்ல பழக்கம்’ என நீங்க புரிந்து இருந்தாலும், உணர்வு பூர்வமாக அதனை மனம் விரும்பி நீங்க ஏற்காத பொழுது, விஷயத்தை அணுக சோம்பேறித்தனம் ஏற்படும்.
கிடைக்கவிருக்கும் முழு பலன்களை ஆழ்ந்து உணர்வு பூர்வமாக அடிக்கடி மனதில் காட்சிப் படுத்திப் ( Imagine )பாருங்க. சோம்பறித்தனம் சிறிது சிறிதாக விலக ஆரம்பிக்கும்.
இரண்டாவது குறிப்பு: செயல்பாடுகளில் நிர்வாக திறமையை மேம்படுத்துதல் ( Improving Management Skills )
முக்கியமற்ற செயல்பாடுகளை முக்கியத்துவம் கொடுத்து முதலில் முடித்து விட்டு, உடல் மன ஆற்றல் குறைந்த நிலையில் முன்னுரிமை கொடுக்க வேண்டிய விஷயத்தைப் அணுகும் பொழுது, ஆற்றல் குறைந்து உள்ள காரணத்தாலேயே விஷயத்தை அணுக சோம்பேறித் தனம் ஏற்படும்.
எதனை முதலில் முடிக்க, பின்பு எது? என சரியாக திட்டமிட்டு நிர்வாகத் திறமையை மேம்படுத்துங்க. சோம்பேறித்தனம் நீங்கும்.
மூன்றாவது குறிப்பு: செய்வது எளிதென விஷயத்தை அணுகுதல் ( Easy To Do )
செய்ய வேண்டிய விஷயத்தை மிகப் பெரிய விஷயமாக நினைத்தீர்கள் எனில், செய்வதை கடினமாக உணர்வீர்கள். செயலை செய்ய சோம்பேறித்தனம் ஏற்படும்.
“இந்த விஷயம் தானே, மிக எளிதாக முடித்து விடலாம்” என நினைக்க மனதை பழக்கப் படுத்துங்க.
நிஜமாகவே பெரிய விஷயமாக இருந்தாலும், சின்ன சின்ன விஷயமாக திட்டமிட்டு, பிரித்து விஷயத்தை செய்யும் பொழுது செயலை சுறு சுறுப்புடன் செய்ய முடியும்.
எளிதாக செயலை முடிப்பது போல மனதில் நினைத்துப் பாருங்க. சோம்பேறித்தனம் அற்று self motivation உடன் செயலை செய்து முடிக்க முடியும்.
நான்காவது குறிப்பு: கவனச் சிதறலை தடுத்தல் ( Avoid Distraction )
ஆர்வத்தை தூண்டும் விஷயங்கள் உங்களை சுற்றி இருக்கும் பொழுது, செய்ய வேண்டிய விஷயத்தை செய்ய முடியாமல் கவன சிதறல் ஏற்படலாம். மனக் கட்டுப்பாட்டை ( control mind ) மேம்படுத்துங்க.கவனச் சிதறலுக்கு தடைப் போடுங்க.
முக்கியம் அற்ற விஷயங்கள் ஆர்வத்தை தூண்டும் விஷயங்களாக இருக்கலாம். எது முக்கியம்? எது முக்கியம் அற்றது என்ற தெளிவுடன் இருங்க.
செய்ய வேண்டிய விஷயத்திற்கு முன்னுரிமை கொடுத்து, கவனத்தை திசை திருப்பும் விஷயங்கள் அருகில் இல்லாமல் பாத்துக்கோங்க.
ஐந்தாவது குறிப்பு: உடலையும் மனதையும் எப்பொழுதும் சுறுசுறுப்பாக வைத்திருத்தல் ( Keep Your Body and Mind Active )
உடலும் மனமும் சுறுசுறுப்புடன் இருக்கும் பொழுது எந்த விஷயத்தையும் செய்யாமல் தள்ளிப் போட தோனாது.
உடற்பயிற்சி, யோகா என பயிற்சிகளை செய்து உடலை ஆரோக்கியமாக வைத்திருங்க.
எப்பொழுதும் மன அழுத்தத்தில் ( depression ) இருந்தாலோ, பதட்டம் ( anxiety ) மற்றும் பயத்தில் இருந்தாலோ, ஆரோக்கியமற்ற உணவு பழக்கவழக்கம் இருந்தாலோ சோம்பேறித்தனம் இருக்கும்.
பதட்டம், பயம் மற்றும் மன அழுத்தம் ஏற்படும் பொழுது positive வான எண்ணங்களை கொண்டு மனதை திசை திருப்புங்க. மன சுறு சுறுப்பு இழக்காமல் இருப்பீங்க. மன வலிமையை மேம்படுத்தி வைத்திருங்க.
ஆரோக்கியம் அற்ற உணவுகளை தவிர்த்து ஆரோக்கிய உணவுகளை சாப்பிடுங்க. ஆரோக்கிய உணவுகள் சுறு சுறுப்பை மேம்படுத்தும். தினம் உண்ணும் உணவை அளவோடு உண்ணுங்க. அளவோடு உணவருந்தும் பொழுது உடல் சுறு சுறுப்புடன் இருக்கும்.
உறக்கம் மற்றும் rest போதுமானதாக இல்லாத பொழுது சலிப்புணர்வு ஏற்படும். நல்ல ஆரோக்கிய உறக்கம், போதுமான rest இருக்குமாறு பாத்துக்கோங்க.
ஆறாவது குறிப்பு: வாழ்க்கை நோக்கத்தில் தெளிவுடன் இருத்தல் ( Purpose of Life )
நீங்க வாழும் நோக்கம் என்ன? அந்த நோக்கத்தை நிறைவேற்றுவதால் கிடைக்கும் பலன் என்ன? அதற்கு தேவையான சுய உந்துதல் என்ன? என்பதில் தெளிவுடன் இருக்கும் பொழுது வாழ்க்கை சலிப்பு நீங்கி சுய தெளிவுடன் வாழ்க்கை நோக்கத்திற்காக ( life purpose ) , அடைய வேண்டிய விஷயங்களில் சுறு சுறுப்பாக செயல்பட முடியும்.
தினம் செய்யும் செயல்கள் வாழ்க்கை நோக்கத்தை நிறைவெற்ற என இருக்கும் பொழுது போக வேண்டிய பாதையில் தெளிவு இருக்கும். ‘நோக்கத்தை அடைய செயல்பட வேண்டும்’ என மன ஊக்கம் ஏற்படும். சுறு சுறுப்புடன் செயல்பட முடியும்.
ஏழாவது குறிப்பு: விளைவுகளை நினைத்துப் பார்த்தல் ( Think About The Effect )
நீங்க செயலை செய்யாமல் விடுவதால் ஏற்பட போகும் விளைவுகளை மனதில் ஆழ்ந்து நினைத்துப் பாருங்க. ஏற்பட போகும் பாதிப்புகள் செயலை சுறு சுறுப்புடன் அணுகும் திறனைக் கொடுக்கும்.
செய்யாமல் விட்டுவிட்டால் எதிர்காலத்தில் இது நடந்து விடுமோ, அது நடந்துவிடுமோ என்ற முன் எச்சரிக்கை எண்ணமே செயலை செய்ய தூண்டும்.
எட்டாவது குறிப்பு: ஒரு நேரத்தில் ஒரு செயல் ( One Action At A Time )
அளவிற்கு அதிகமாக பல வேலைகளை ஒரே குறிப்பிட்ட நேரத்தில் செய்ய திட்டமிடும் பொழுது எதனை செய்ய என்ற பதட்டத்தில் எதையும் செய்ய முடியாமல் சோம்பேறித்தனம் ஏற்பட்டு விடும்.
பல செயல்களை நினைத்துக் கொண்டே இருந்தால் இறுதியாக எதையும் செய்து முடிக்க முடியாது.
‘ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஒரு செயல்’ என்ற முழு தெளிவுடன் திட்டமிட்டு செயல்படுங்க. சோம்பேறித்தனம் நீங்கி செயல் படுவீங்க.
ஒன்பதாவது குறிப்பு: உறுதிமொழி எடுத்தல் ( Affirmation )
நினைத்த வேலையை உறுதியாக செய்து முடித்து விடுவேன், நினைத்ததை செய்ய எனக்கு முழு ஆற்றல் உள்ளது, எதையும் உடனே செய்து முடித்து விடுவேன், செயலை செய்தால் மட்டும் தான் தேவையானதை பெற முடியும், செயலை செய்து முடிக்கும் பொழுது என்னுள் திறமை வளரும் போன்ற உறுதி மொழிகளை நீங்க பின்பற்றும் பொழுது உங்களின் உள் ஊக்கம் ஏற்பட்டு நினைத்ததை செய்து முடிப்பீங்க.
சோம்பலாக நினைக்கும் பொழுதெல்லாம் இது போன்ற உறுதிமொழி எடுங்க.
பத்தாவது குறிப்பு: தள்ளிப் போடும் பழக்கத்தை நிறுத்துதல் ( Stop Procrastination )
செயலை தள்ளிப் போட்டு ( procrastinate ) செய்ய பழக்கப் பட்டு இருந்தீங்கனா, இந்த பழக்கமே உங்களுக்கு சோம்பேறித் தனத்தை ஏற்படுத்திவிடும். இந்த நேரத்தில் இந்த செயலை செய்ய வேண்டும் என முடிவெடுத்தவுடனே, அந்த கணம் வரும் பொழுது, அந்த செயலை உடனே செய்ய பழகுங்க. தள்ளிப் போடும் பழக்கத்தை விட முடியும். செயலை சுறுசுறுப்புடன் செய்ய மனம் பழக்கப் படும். தள்ளிப் போட வேண்டும் என்ற எண்ணம் எப்பொழுதும் ஏற்படாது.
தின வாழ்வில் உங்களுடன் பழகுபவர்கள், உங்களை சுற்றி உள்ள சூழ்நிலை எப்படி உள்ளது? உங்க சூழல், பழகுபவர்கள் அனைவரும் சுறுசுறுப்புடன் இருப்பது போல ( stay positive with negative people ) பாத்துக்கோங்க. உங்களின் உள், தானாக, சுறு சுறுப்புடன் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் ஏற்படும்.
சூழலை பிரதிபலிக்கும் கண்ணாடி மனிதன். நீங்க இருக்கும் சூழல் சுறுசுறுப்பு நிறைந்ததாக இருக்கும் பொழுது உங்களுக்குள் சுறுசுறுப்பு ஏற்படும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.