ஒரு ஏழை குடியானவர் தன் சோம்பேறித்தனத்தின் காரணமாக ஏழையாகவே இருந்தார். எப்பொழுதும் பகல் கனவு காண்பது இவரின் வழக்கம். சோம்பேறியாக இருந்தாலும் பசிக்குமே? அதற்காக வேறு வழி இன்றி தினம் பிச்சை எடுக்க செல்வார். அன்று அவருக்கு ஒரு பாத்திரம் நிறைய காய்ச்சிய பால் கிடைத்தது.
வேண்டிய பாலை குடித்து விட்டு, மீதி பாலை தயிராக்க தயார் செய்து கூரையில் தொங்க விட்டு விட்டு, கட்டிலில் படுத்தவண்ணம் பகல் கனவு காண ஆரம்பித்தார்.
“காலையில் பார்த்தல் பால் தயிராக மாற்றப்பட்டு இருக்கும். அதிலிருந்து வெண்ணெய் தயாரிப்பேன். வெண்ணெயை சூடாக்கி அதில் இருந்து நெய் தயாரிப்பேன். சந்தை சென்று நெய்யை விற்று, கொஞ்சம் பணம் சம்பாதிப்பேன். அந்தப் பணத்துடன் நான் ஒரு கோழியை வாங்குவேன். கோழி பல முட்டைகளை இடும், அவை குஞ்சு பொரிக்கும், குஞ்சுகள் பல கோழிகளாக மாறும். இந்த கோழிகள் நூற்றுக்கணக்கான முட்டைகள் இடும். எனக்கு சொந்தமாக ஒரு கோழி பண்ணை வைத்திருப்பேன்.
நான் எனது கோழிகளில் அனைத்து கோழிகளையும் விற்று, சில மாடுகளை வாங்கி, ஒரு பால் பண்ணை திறப்பேன். நகர மக்கள் அனைவரும் என்னிடமிருந்து பால் வாங்குவர். நான் பெரிய பணக்காரராக மாறுவேன். விரைவில் நகைகளை வாங்கி, நகை கடை முதலாளி ஆவேன். என்னிடமிருந்து ராஜா அனைத்து நகைகளையும் வாங்குவார். நான் மிகவும் பணக்காரனாக இருப்பேன். ஒரு பணக்கார குடும்பத்தைச் சேர்ந்த ஒரு அழகிய பெண்ணை நான் திருமணம் செய்வேன். விரைவில் எனக்கு ஒரு அழகான மகன் பிறப்பான். அவன் ஏதேனும் குறும்பு செய்தால் நான் மிகவும் கோபப்படுவேன். ஒரு பெரிய குச்சியால் அவனை அடிக்க செல்வேன் என…” தனது மகனை அடிப்பதாக நினைத்து, குச்சியை உயர்த்தி, பானையில் அடித்தார்.
பால் பானை உடைந்தது. தூக்கத்திலிருந்து எழுந்தார். அப்போது தான் அவர் தான் பகல் கனவு கண்டதை உணர்ந்தார். அனைத்துப் பாலும் வீணாய் போனது.
சோம்பேறித்தனம், எந்த வேலையையும் செய்யவிடாமல், தள்ளிப்போடும் மனப்பான்மையை ஏற்படுத்தும். உள்ளதும் இழக்கும் நிலை உண்டாகும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.