ஒரு ராஜாவிற்கு, சோம்பேறி நண்பன் ஒருவர் இருந்தார். ஒரு நாள் காலை, அந்த சோம்பேறி நண்பர் மன்னனிடம், “என்னால் எதுவும் செய்ய முடியாது என எல்லோரும் ஏன் சொல்கிறார்கள்? என வருத்தமாக உள்ளது. நான் வேலை தேடி செல்லும் பொழுது, எல்லோரும் என்னை மறுக்கின்றார்கள். நான் எந்த நேரத்திலும் எந்த வேலையும் செய்ய மாட்டேன் என்று என் எதிரிகள் எல்லோரிடமும் கூறியுள்ளனர்.” என்றார்.
அதற்கு ராஜா, “நாம் ஒரு ஒப்பந்தம் செய்யலாம். சூரிய அஸ்தமனத்திற்கு முன், நாளை நீங்கள் என் கருவூலத்திற்கு வந்து உங்களால் முடிந்த அளவு தங்கம் மற்றும் முத்துக்களை சேகரித்துக் கொள்ளுங்கள். அவை அனைத்தும் உங்களுடையதாக இருக்கும்.“ என்றார்.
அந்த நபர் தனது வீட்டை நோக்கி தனது மனைவியிடம் விரைந்தார். அவர் எல்லாவற்றையும் மனைவியிடம் விளக்கினார். பின்னர், அடுத்த நாள் காலையில் மிக காலம் தாழ்த்தி எழுந்த கணவனை பார்த்து மனைவி, “போய் இப்பொழுது தங்கத்தையும் ரத்தினங்களையும் கருவூலத்தில் இருந்து எடுத்து வாருங்கள்.” என்றார்.
“என்னால் இப்போது செல்ல முடியாது, முதலில் எனக்கு மதிய உணவு கொடு” என்றார் சோம்பேறி நபர்.
மதிய உணவு சாப்பிட்ட பிறகு, அவர் ஒரு தூக்கத்தை எடுக்க முடிவு செய்தார். 2 மணி நேரம் தூங்கினார். பின்னர், பிற்பகலில், அவர் ஒரு சில பைகளை எடுத்துக்கொண்டு ராஜாவின் கருவூலத்தை நோக்கிச் சென்றார். வழியில், அவர் வெப்பத்தை உணர்ந்ததால், ஓய்வெடுக்க ஒரு மரத்தின் கீழ் உட்கார்ந்து மேலும் 5 மணி நேரம் தூங்கி முடித்தார் .
அவர் இறுதியாக அரண்மனையை அடைந்தபொழுது, ஏற்கனவே மாலை தாமதமாகி இருந்தது. அது சூரிய அஸ்தமனமான நேரம். அவர் அங்கு செல்வதற்கு முன்பே, அரண்மனை வாயில்கள் மூடப்பட்டிருந்தன.
பணக்காரர் ஆவதற்கு கிடைத்த பொன்னான வாய்ப்பை அவர் இழந்தார். ஏனென்றால், அவருக்கு நேரத்தின் மதிப்பு தெரியவில்லை.
நேரம் விலைமதிப்பற்றது! முக்கியமில்லாத விஷயங்களில் நேரத்தை வீணடிப்பதை நிறுத்துவது புத்திசாலித்தனம்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.