உறவு முறிவின் 12 அறிகுறிகள்! ( 12 Signs to Leave a Relationship! ) என்ன என இப்ப பார்க்கலாம்.
ஒரு உறவுடன் நீடித்த தொடர்பில் இருக்க நீங்க விரும்பறீங்க. உங்களுடன் நீடித்த தொடர்பில் இருக்க அந்த உறவும் விரும்புகிறார். இருந்தாலும், ‘சில விஷயங்கள்’ உங்கள் இருவருக்குள் உள்ள உறவு முறிந்து போக காரணங்களாக அமைத்து விடுகிறது.
இந்த பொதுவான காரணங்களை நீங்க புரிந்து இருக்கும் பொழுது விழிப்போடு உங்களால் செயல் பட முடியும். இந்த காரணங்களை தவிர்த்து, உறவு முறிவை தடுக்க உங்களால் முயற்சிக்க முடியும்.
நீங்க இந்த தவிர்க்க வேண்டிய விஷயங்களை செயல் படுத்தினாலும் சரி, உங்க உறவு செயல் படுத்தினாலும் சரி, உறவு முறிவை தடுக்க முடியாமல் போய் விடும்.
அந்த 12 பொதுவான காரணங்களை இப்ப பார்க்கலாம். அதனை புரிந்து, குறிப்பெடுத்து, உங்க தின வாழ்வில் அவற்றை தவிர்க்க பாருங்க.
12 முக்கிய காரணங்கள் இதோ:
- காரணம் 1: புரிதல் இல்லாமை ( Misunderstanding )
- காரணம் 2: பொதுவான ஆர்வம் இல்லாமை ( Lack of Common Interest )
- காரணம் 3: பிடிக்காத நபருடன் நட்ப்பில் இருத்தல் ( Being Friends with Someone You Don’t Like )
- காரணம் 4: கட்டுப் படுத்த நினைத்தல் ( Control )
- காரணம் 5: எதையும் கொடுக்காமல், எதிர்பார்த்து கொண்டு மட்டும் இருத்தல் ( Not giving anything, just being expectant )
- காரணம் 6: முடிவெடுக்கும் உரிமையை பறித்தல் ( Deprivation of Decision-Making Rights )
- காரணம் 7: சுதந்திரத்தை பறித்தல் ( Expropriation of Freedom )
- காரணம் 8: நம்பிக்கை அற்று இருத்தல் ( Distrust )
- காரணம் 9: பிறரிடம் குறை சொல்லுதல் ( Blaming About You To Others)
- காரணம் 10: மட்டப் படுத்துதல் ( Insult You )
- காரணம் 11: Perfect ஆக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ( Perfectionism )
- காரணம் 12: மறைமுகமாக துரோகம் செய்தல் ( Untrustworthy )
காரணம் 1: புரிதல் இல்லாமை
உங்களுக்கும் உங்க உறவிற்கும் இடையில் சரியான புரிதல் இல்லாமல் ‘அளவிற்கு மீறிய விதத்தில்’ அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டால் உறவு கூடிய விரைவில் முறிய போகிறது என நீங்க புரிந்து கொள்ளலாம்.
உறவுகளுக்கு இடையில் புரிதல் இல்லாமல் சில சண்டைகள் வருவது சகஜம். சரியான புரிதல் ஏற்பட்டு உறவு வலுபெற இந்த சின்ன சின்ன சண்டைகள் உதவி புரியும். ஆனா, எப்பொழுதும் புரிதலே ஏற்படாமல் சண்டைகள் மட்டும் அதிகரித்துக் கொண்டே சென்றால் உறவு நீடிக்கப் போவதில்லை என முன்கூட்டியே நீங்க தெரிந்துக் கொள்ளலாம்.
எதிர் தரப்பில் இருப்பவருக்கு, அவருக்கு என நியாயமான எண்ணங்கள் இருக்கலாம். நீங்க பொறுமையாக அவர் சொல்வதை புரிந்து கொள்ள முயற்சிக்கும் பொழுது, உங்களுக்கும் அவருக்கும் இடையில் இணக்கம் ஏற்பட்டு உறவு மேம்பட வாய்ப்புண்டு.
உறவை சரியாக புரிந்துகொள்ள எப்பொழுதும் முயற்சி செய்யுங்க.
காரணம் 2: பொதுவான ஆர்வம் இல்லாமை
உங்களுக்கும் உங்க உறவுக்கும் இடையில், எந்தவித பொதுவான ஆர்வமிக்க எண்ண செயல் பகிர்வு இல்லாத பொழுது, உறவு வலுப்பெற வாய்ப்பில்லை.
குறைந்தது ஒரு விஷயம் ஆவது உங்கள் இருவருக்கும் இடையில் பொதுவான ஆர்வமாக இருக்கனும்.
உதாரணமா, ஒரே துறையில் ஆர்வம், ஒரே பொழுது போக்கில் ஆர்வம் இவற்றை சொல்லலாம். பொதுவான ஆர்வம் இருக்கும் பொழுது இருவருக்கும் இடையில் அதிக நேரம் செலவிட வாய்ப்பு ஏற்படும். உறவு வலுப் பெற, பொதுவான ஆர்வத்தை கண்டுபிடித்து நேரத்தை ஒன்றாக செலவிடுங்க.
காரணம் 3: பிடிக்காத நபருடன் நட்ப்பில் இருத்தல்
உங்களுக்கு மிக பிடிக்காத நபர்களிடம் உங்க உறவோ, அந்த உறவிற்கு மிக பிடிக்காத நபர்களிடம் நீங்களோ ஆழ்ந்த நட்புடன் இருக்கும் பொழுது, உங்களுக்கு அவரையோ, அவருக்கு உங்களையோ, பிடிக்காமல் போவது இயற்கை.
உங்களை பார்க்கும் பொழுது, உங்க உறவுற்கு அந்த பிடிக்காத நபரின் நியாபகம் வரலாம். அல்லது உங்க உறவை நீங்க பார்க்கும் பொழுது உங்களுக்கு அந்த பிடிக்காத நபரின் நியாபகம் வரலாம்.பிடிக்காத அந்த நபரின் நட்பு, நியாயமாக தேவை இல்லாத ஒன்று எனில் உங்க உறவிற்காக அந்த நட்ப்பை தவிர்த்திடுங்க.
காரணம் 4: கட்டுப் படுத்த நினைத்தல்
நீங்க எது செய்தாலும் உங்க உறவு உங்களை கட்டுப்படுத்தி கொண்டே இருந்தால் உங்களுக்கு எப்படி இருக்கும்?
‘எங்கே தன் கட்டுப் பாட்டை மீறி செயல்பட்டு விடுவாரோ? என்ற பய உணர்வோ அல்லது கட்டுப் பாட்டில் வைத்திருக்கும் பொழுது தான், தன் எண்ணம் போல செய்லபட வைக்க முடியும் என்ற எண்ணமோ’ அந்த உறவு உங்களை கட்டுப் படுத்த நினைக்க காரணமாக இருக்கலாம்.
இந்த விருப்பம் மித மிஞ்சி, உங்களை அடக்கி ஆள அந்த உறவு நினைத்தால் உங்களால் உங்க உறவுடன் நீடித்த தொடர்பில் இருக்க முடியாது. இந்த செயலை நீங்க பிறருக்கு செய்தாலும் உங்களுடன் தொடர்பில் இருக்க அந்த உறவால் முடியாது.
உறவை நீடிக்க விருப்பம் இருந்தால் உறவை கட்டுப் படுத்த நினைக்காதீங்க.
காரணம் 5: எதையும் கொடுக்காமல், எதிர்பார்த்து கொண்டு மட்டும் இருத்தல்
நீங்க மட்டும் உங்க உறவிற்கு ஏதாவது கொடுத்துக் கொண்டே இருக்கறீங்க. ஆனா, ‘அந்த உறவு நன்றிக்கடனாக எதுவுமே உங்களுக்கு கொடுக்க தயாராக இல்ல! அல்லது ஒப்புக்கு ஏதோ கொடுத்துவிட்டு, எப்பொழுதும் தனக்காக உங்களிடம் எதிர்பார்த்து கொண்டே உள்ளார்!’ அவரின் இந்த சுயநலமான போக்கு, உங்களுக்கு அவர் மீது விருப்பம் இல்லாமல் போக காரணமாக அமைந்து விடும்.
நீங்க உங்க உறவிடம் இந்த தவறை செய்யாமல் பாத்துக்கோங்க. உங்களால் திரும்ப கொடுக்க முடிந்தது ‘சிறிதோ பெரிதோ’, நன்றியுடன் இருங்க. உறவு வலுப்பெறும்.
காரணம் 6: முடிவெடுக்கும் உரிமையை பறித்தல்
உங்களுடைய உறவு உங்களிடம் எந்த ஆலோசனையும் கேட்க்காமல் உங்களுக்கான உரிமையை கொடுக்காமல் தன் எண்ணப் படி மட்டும் அனைத்து காரியங்களையும் செய்தா, நீங்க எப்படி உணர்வீங்க? அந்த உறவை பற்றி உங்களுக்கு என்ன நினைக்க தோன்றும்?
இந்த உலகில் யாரும் யாருக்கும் அடிமை இல்லை. அறிவு நிலையில் மாற்றங்கள் இருக்கலாம். அதற்காக அடிமை படுத்த வேண்டிய செயலையோ, உரிமையை பறிக்கும் செயலிலேயோ ஈடுபட கூடாது என புரிந்து நீங்க மனதளவில் கூட பிறர் உரிமையை பறிக்க நினைக்காதீங்க.
உறவை சக நட்ப்பாக பாவிக்கும் பழக்கத்தை மேம்படுத்துங்க. உறவு வலுப்பெறும்.
காரணம் 7: சுதந்திரத்தை பறித்தல்
நீங்க நீங்களாக இருக்க பிற உறவு தடையாக இருந்தால்? உங்களுடைய சுதந்திரத்தை பிறர் பறித்தால்? உங்களுடைய செயல்பாடுகள் வாழ்க்கை முன்னேற்றத்தை நோக்கி நல்ல விதத்தில் இருக்கும் பொழுது உங்களுடைய தின சுதந்திரத்தை பறித்து, தன் நலனுக்காக உங்க உறவு பயன்படுத்த நினைத்தால் அந்த உறவுடன் நீங்க நீடித்து இருக்க வாய்ப்பில்லை.
நீங்க இந்த தவறை செய்து கொண்டிருந்தால் அந்த குணத்தை மாற்றுங்க.
காரணம் 8: நம்பிக்கை அற்று இருத்தல்
உறவுகளுக்குள் நம்பிக்கை இருந்தால் மட்டும் தான் உறவை நீடிக்க முடியும்.
‘நம்பிக்கை’ உறவின் அஸ்திவாரம். எதற்கெடுத்தாலும் சந்தேகப் பட்டுக் கொண்டே இருந்தால் உறவை வலுப்படுத்த முடியாது.
புரிதலை மேம்படுத்தும் பொழுது நம்பிக்கையை மேம்படுத்த முடியும். உறவு வலுப்பெறும். நம்பிக்கையை மேம்படுத்தும் செயலில் ஈடுபடுங்க. தேவை அற்று எப்பொழுதும் உறவை சந்தேக கண்ணோடு பார்த்துக் கொண்டே இருக்காதீங்க.
காரணம் 9: பிறரிடம் குறை சொல்லுதல்
குறைகள் இல்லாத உயிரினம் இவ்வுலகில் இல்லை. ஏதோ சில பல குறைகள் அனைவருக்கும் இருக்கும். அந்த குறைகளை சரி செய்ய நீங்க உங்க உறவிடமோ அல்லது உங்க உறவு உங்களிடமோ முறையிட்டால் அதில் தவறில்லை. திருத்தும் நோக்கம் அதில் இருக்கு. ஆனா, பிறரிடம் உங்களை பற்றி உங்க உறவோ அல்லது நீங்க உங்க உறவை பற்றி பிறரிடமோ குறை சொல்லும் பொழுது உறவிற்கு இடையில் விரிசல் ஏற்படும். நாட்பட உறவு முறிவு ஏற்படும்.
காரணம் 10: மட்டப் படுத்துதல்
உங்களை பிறர் குறைத்து மதிப்பிட்டு தாழ்த்தி கொண்டே இருந்தால் அந்த உறவை உங்களுக்கு பிடிக்குமா? ‘மட்டப் படுத்தும் செயல்’ உறவை முறித்து விடும்.
தன்னுடைய தரத்தை உயர்த்தி சாதிக்க நினைக்க வேண்டுமே ஒழிய பிறரை தாழ்த்தி வாழ நினைக்க கூடாது. உறவு நிலைக்காது. உங்களை உயர்த்துவது போல, பிறரையும் உயர்த்துங்க.
காரணம் 11: Perfect ஆக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு
‘முற்றிலும் perfect ஆக இருக்கனும்’ என்ற எதிர்பார்ப்பு உறவை முறித்து விடும்.
ஒரு நாளைய செயலில் முழுவதும் perfect ஆக எத்தனை செயல்களை உங்களால் செய்ய முடிகிறது? நீங்க perfect என நினைப்பதை பிறர் perfect என நினைக்காமல் இருக்கலாம்.
முழு Perfect என்பது பார்ப்பவர் பார்வையை பொறுத்தது. இதனை புரிந்து செயல்படும் பொழுது இதன் காரணமாக ஏற்படும் உறவு முறிவை தவிர்த்து விடலாம்.
காரணம் 12: மறைமுகமாக துரோகம் செய்தல்
துரோகம் என்ற ஒன்றை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. மறைமுகமான துரோகம் மிக மோசமான செயல். இந்த செயலை செய்து கொண்டு உறவை நீடிக்கலாம் என ஆசை படுவது சரியல்ல. இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒருநாள் தெரிந்து விடும்.
பிறருக்கு துரோகம் செய்ய என்றும் முயலாதீங்க.
இந்த 12 காரணங்களை தவிர்த்திடுங்க.
உறவுகளுக்கு இடையில் புரிதலும், ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்தலும், பொது தர்மமும் இருந்தால் அந்த உறவு நீடிக்கும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.