பிறரை ஈர்க்கும் விதத்தில் இருப்பது எப்படி? 10 Things That Make You Attractive in Tamil | AsK LIFE Motivation

Attract People Tamil Quotes

நீங்க ஒருவரை சந்திக்கறீங்க. அவர் உங்களை ஈர்க்கும் விதத்தில் attractive ஆக இருக்கிறார். உங்களுக்கு அவரை பற்றிய அபிப்ராயம் எப்படி இருக்கும்? ஒரு hero வை பார்ப்பது போல பார்ப்பீங்க.

அவரை போலவே இருந்தால் எப்படி இருக்கும்? என்ற ஆசை உங்களுக்கு ஏற்படும். ஈர்க்கும் விதத்தில் இருக்க இவர்கள் செய்வது என்ன? அழகாக உள்ளார்களா? சிவப்பாக உள்ளார்களா? பணக்காரராக உள்ளார்களா? கண்டிப்பாக கிடையாது. அழகு/நிறம்/பணம் மட்டுமே ஒருவருடைய ஈர்ப்பை நிர்ணயிப்பது கிடையாது.

உங்களை ஈர்த்த சில மனிதர்கள் இருப்பாங்க. அவர்களை நினைத்துப் பாருங்க. மக்களை ஈர்த்த அனைத்து ஹீரோக்களும் அழகானவர்களா? சிவப்பானவர்களா? அல்லது பணத்தை மட்டுமே வைத்து ஈர்க்கிறார்களா? சராசரி அழகுடன் பிறரை ஈர்த்துக் கொண்டிருக்கும் பல ஹீரோக்களும் ஏழைகளாக பிறந்து வளர்த்தவர்கள் தான்.

பின் எந்த விஷயங்கள்? அவர்களை பிறரிடம் இருந்து வேறுபடுத்தி ஈர்க்கும் விதத்தில் வாழ்வை அமைத்துக் கொள்ள காரணமாக உள்ளது? யோசித்துப் பாருங்க.

சராசரி மனிதர்கள் செயல்படுத்தாத 10 முக்கியமான விஷயங்களை தின வாழ்வில் ‘பிறரை ஈர்க்கும் விதத்தில் இருக்கும் நபர்கள்’ செயல் படுத்துகின்றனர். அந்த விஷயங்கள் என்ன? என இப்ப பார்க்கலாம். அவற்றை குறிப்பெடுத்து உங்க தினசரி வாழ்க்கையில் செயல் படுத்துங்க.

10 முக்கிய விஷயங்கள் இதோ:

முதல் விஷயம்: Positive Vibration ஐ வெளிப் படுத்துதல்

உங்க நண்பரோ உங்களுக்கு தெரிந்தவரோ உங்களை சந்திக்க வந்துள்ளார். ஏன்? உங்களை இதற்கு முன் பார்க்காத நபராக கூட இருக்கலாம். அவர் உங்களை பார்க்கறப்ப எவ்விதமான vibration ஐ உங்களின் உள் இருந்து நீங்க அவரிடம் வெளிப்படுத்தறீங்க? மிகவும் positive ஆன சுறு சுறுப்பான நபராக நீங்க அவர் கண்களுக்கு தெரிந்தால் உங்களின் உள் இருந்து வெளிப்படும் positive vibration அவர் சோம்பலாக இருந்தாலும் உங்களை பார்த்தவுடன் அவரின் உள் சுறுசுறுப்பை ஏற்படுத்திவிடும்.

பிறரின் positive energy ஐ குறைத்து விடும் விதத்தில் உங்களில் உள் இருந்து வெளிப் படும் vibration, energy, negative ஆக இல்லாம பார்த்துக்கோங்க. உங்களை பார்த்தாலே, உங்களை நினைத்தாலே, positive ஆன எண்ணங்கள், positive energy ஒருவருக்கு உருவாகனும்.

இரண்டாவது விஷயம்: Positive ஆக பேசுதல்

நீங்க அவரிடம் பேசும் பொழுது? எப்படி பட்ட வார்த்தைகளை பயன் படுத்தறீங்க. உங்களுடைய வார்த்தைகள் மிகவும் positive ஆக, mature ஆக இருக்கும் பொழுது பிறரை ஈர்ப்பதும் உங்களுக்கு சாத்தியப் படும்.

இதனை தவிர்த்து, எப்பொழுதும் எதையாவது குறை சொல்லிக் கொண்டே இருந்தாலோ, negative ஆன வார்த்தைகளை பேசிக் கொண்டே இருந்தாலோ, negative ஆன சூழலை அவரை சுற்றி நீங்க உருவாக்கறீங்க.

உங்களுடைய வார்த்தைகளில் உண்மை இருந்தாலும், குறை சொல்ல வேண்டிய விஷயமாக இருந்தாலும், mature ஆன மன நிலையில் விஷயத்தை நீங்க அணுகும் பொழுது சூழலின் positive தன்மை உங்களால் கெட்டுப் போகாது.

அதுமட்டும் அல்ல, குறை காணும் விஷயத்தை கூட எப்படி positive ஆக அணுகுவது என்ற positive ஆன எண்ண உந்துதலை பிறருக்கு நீங்க ஏற்படுத்தறீங்க. உங்களால் ஒரு சூழலில் harmony/நல்லிணக்கம் கெடாமல் இருக்கும். எப்படி பட்ட சூழலையும் positive ஆக சமாளிக்கறாரே? என்ற ஈர்ப்பு உங்களைப் பற்றி பிறர் எண்ணங்களுக்கு ஏற்படும். அதனால் எப்பவுமே positive ஆக பேசுங்க. பிறரை குறை சொல்லாமல் பேசுங்க. mature ஆக பேசுங்க.

மூன்றாவது விஷயம்: அர்த்தமுள்ள விஷயங்களை மட்டும் பேசுதல்

negative ஆக விஷயங்களை பேசக் கூடாது என்பது எவ்வளவு முக்கியமோ அதே அளவு முக்கியம் பயனற்ற பேச்சுக்களை ஒருவரிடம் பேசக் கூடாது. நேரம் மிக மதிப்பு மிக்கது. உங்களுடைய நேரமும் முக்கியம், கேட்பவரின் நேரமும் முக்கியம். நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து சரியான பயனுள்ள அர்த்தமுள்ள பேச்சுக்களை பொறுப்புணர்வோடு பேசுங்க.

பிரபலமான மனிதர்களை நினைத்துப் பாருங்க. நேரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து சரியான பயனுள்ள அர்த்தமுள்ள பேச்சுக்களை மட்டும் பேசுவாங்க. அவர் செய்யும் செயலும், இதே போல, அர்த்தமுள்ளதாக நேரத்திற்கு மதிப்பு கொடுத்து இருக்கும். இவர்களுடைய ஆளுமையை பார்க்கும் பொழுது attractive ஆக இருக்கும்.

இதே போல,நீங்களும் நேரத்திற்கு மதிப்பு கொடுத்து சரியான பயனுள்ள அர்த்தமுள்ள விஷயங்களை பொறுப்புணர்வோடு செயல் படுத்துங்க. பிறரை உங்களை அறியாமல் ஈர்ப்பீங்க.

நான்காவது விஷயம்: நிகழ்காலத்தில் செயல் படுதல்

ஒருவரை சந்திக்க நீங்க ஏற்கனவே எடுத்த முடிவால் அவருக்கான நேரத்தை இத்தருணம் ஒதுக்கி இருப்பீங்க.

அவருக்கு என ஒதுக்கிய நேரத்தில் அவருக்காக மட்டும் அவர் பேசுவதை முழுமையாக காது கொடுத்து கேட்பதற்கு என அவரிடம் நீங்க என்ன பேச வேண்டுமோ அந்த விஷயத்தை மட்டும் பேச என முழு மனதை அவருக்காக அந்த விஷயத்திற்காக செலுத்தி செயல்படுங்க.

பிறரை ஈர்க்க தேவையான முக்கியமான விஷயங்களில் இதுவும் ஒன்று. நீங்க ஒரு இடத்திலும் உங்க மனம் வேறொரு இடத்திலும் இருந்தால் உங்களுடைய தரம் அந்த இடத்தில் குறைந்து விடும். Cell phone பார்ப்பது, வேறு ஒரு நிகழ்வை நினைத்துக் கொண்டு இருப்பது போன்ற செயல்களை செய்யாதீங்க. தரம் குறைந்து ஒருவரை ஈர்க்கும் விதத்தில் செயல்பட முடியாது.

Office meeting ல் நீங்க இருக்கும் பொழுது உங்க சக ஊழியரின் மனம் presence ல் இல்லாமல் நீங்க கேட்கும் கேள்விகளுக்கு சரியாக பதிலளிக்காமல் இருந்தால் அவரை பற்றி நீங்க என்ன நினைப்பீங்க? அவரின் தரத்தை நீங்க குறைத்து மதிப்பிடுவீங்க. அவரால் என்றும் உங்களை ஈர்க்க முடியாது. ஆக, செய்யும் பேசும் விஷயத்தில் முழு ஈடுபாட்டுடன் முழு மனதுடன் நிகழ் காலம் presence ல் இருந்து செயல்படுங்க. பிறரை ஈர்க்க முடியும்.

ஐந்தாவது விஷயம்: Life Style ஐ ஆரோக்கியமாக வைத்திருத்தல்

உங்களுடைய life style ஐ ஆரோக்கியமானதாக பிறரை impress செய்யும் விதத்தில் இருக்குமாரு அமைத்துக்கோங்க.

உதாரணமா,
உங்களுடைய உடல் எடையை சரியாக maintain செய்யுங்க. ‘ஆள் பாதி ஆடை பாதி’ என கேள்விப்பட்டு இருப்பீங்க. நல்ல விதத்தில் உடைகளை அணிய பழகுங்க. ஆரோக்கியமான உறக்கம் நீங்க புத்துணர்வுடன் இருப்பதை வெளிப்படுத்தும். இது போல நல்ல ஆரோக்கியமான life style ஐ அமைத்து நீங்க வாழும் பொழுது பிறரை ஈர்ப்பீங்க.

ஆறாவது விஷயம்: திறமைகளை வெளிப் படுத்துதல்

பலவித திறமைகளுடன் தெளிவாக செயல்படும் நபராக உங்களை நீங்க வெளிப்படுத்துங்க. உங்களுடைய திறமைகளை தின வாழ்வில் மேம்படுத்துங்க. பிறர் பார்த்து ஆச்சரியப்படும் திறமைகளுடன் நீங்க இருக்கும் பொழுது attract செய்யும் சக்தியும் உங்களுக்கு அதிகரிக்கும்.

ஏழாவது விஷயம்: மரியாதையை வெளிப் படுத்துதல்

எவ்விதமான மனிதர்களிடம் நீங்க பழகினாலும் அவருடைய மரியாதையை எவ்விதத்திலும் தாழ்த்தாமல் செயல்படுங்க. ஏழையோ பணக்காரரோ, திறமையானவரோ திறமை அற்றவரோ, மரியாதை என்பது அனைவருக்கும் பொதுவானது.

உங்களுடைய மரியாதையை விட்டுக் கொடுக்காமல் அதே சமயத்தில் பிறருக்கும் மரியாதை கொடுத்து செயல்படுங்க. உங்களுடைய தரம் உயரும். தரமிக்க உயர உயர பிறர் மனதில் ஈர்க்க படுவீங்க.

எட்டாவது விஷயம்: மனதார பாராட்டுதல்

உங்களுடைய உறவினர்/ சக ஊழியர்/ பணியாளர் என நீங்க பழகும் நபர்கள் செய்த செய்து கொண்டிருக்கும் விஷயங்கள் மதிப்பு மிக்கதாக உங்களுக்கு தெரியவரும் பொழுது மனதார பாராட்ட பழகுங்க. இந்த பாராட்டு அவர்களுக்கு ஊக்கத்தை கொடுக்கும். உங்களின் மீது அவர்களுக்கு மதிப்பு உண்டாகும். மதிப்பு ஈர்ப்பாக மாறும்.

ஒன்பதாவது விஷயம்: உணர்வு பூர்வமாக பேசுதல்

அறிவு பூர்வமாக பேசுவது ஒரு பக்கம் என்றாலும் உணர்வு பூர்வமாக பிறரை கவரும் விதத்தில் பேசுங்க.

பிரபலமான தலைவர்களை கவனித்துப் பாருங்க. உங்களை ஈர்த்த தலைவர் யார்? உணர்வு பூர்வமாக உங்களை ஈர்த்திருப்பாங்க. உங்களுடைய பேச்சில், ‘அறிவுடன், உணர்வும் கலந்து இருப்பது போல’ பேசி பழகுங்க. பிறரை ஈர்க்க முடியும்.

பத்தாவது விஷயம்: எண்ணம் சொல் செயல் ஒன்று போல இருத்தல்

உங்களுடைய எண்ணம் சொல் செயல் இவை மூன்றும் ஒன்று போல இருக்குமாறு செயல்படுங்க. இவை மூன்றும் ஒன்று போல இருக்கும் பொழுது தான் ஒருவரை நிரந்தரமாக உங்களால் ஈர்க்க முடியும்.

இது போல,
positive vibration, energy ஐ உங்களின் உள் இருந்து ஏற்படுத்துவது, positive வாக பிறரை குறை சொல்லாமல் matured ஆக பேசுவது, நேரத்திற்கு மதிப்பு கொடுத்து சரியான பயனுள்ள அர்த்தமுள்ள விஷயங்களை பொறுப்புணர்வோடு பேசுவது செயல்படுத்துவது, செய்யும் பேசும் விஷயத்தில் முழு ஈடுபாட்டுடன் முழு மனதுடன் நிகழ் காலத்தில் செயல்படுவது, நல்ல ஆரோக்கியமான life style ஐ அமைத்து வாழ்வது, பிறர் பார்த்து ஆச்சரியப்படும் திறமைகளை வளர்த்து செயல்படுவது, பிறருடைய மரியாதையை எவ்விதத்திலும் தாழ்த்தாமல் செயல்படுவது, பிறரின் மதிப்புமிக்க செயல்களை பாராட்டுவது, உங்களுடைய பேச்சில், அறிவுடன் உணர்வும் கலந்து இருப்பது போல பேசுவது, எண்ணம் சொல் செயல் இவை மூன்றும் ஒன்று போல இருக்குமாறு செயல்படுவது, இந்த 10 விஷயங்களையும் நீங்க குறிப்பெடுத்து செயல்படுத்தும் பொழுது பிறரை ஈர்க்கும் விதத்தில் மாறிடுவீங்க.

கல்லுக்கு இல்லாத மதிப்பு கல் சிலையாக மாறியவுடன் கிடைத்து விடுகிறது. ஈர்க்காத கல் சிலையாக மாறியவுடன் ஈர்க்கிறது. உங்க மதிப்பை மேம்படுத்துங்க. தானாக பிறரை ஈர்க்க ஆரம்பித்திடுவீங்க.

UMA LIFE COACH – Uma, Life Coach

உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.

%d bloggers like this: