ஒரு பூக்கடையின் முன்பு, ஒரு நபர் தன் காரை நிறுத்தினார். 100 கி.மீ தொலைவில் வாழும் தன் தாய்க்கு செயற்கை பூக்களை அனுப்பும் படி கடைக்காரரிடம் அந்த நபர் காரில் இருந்தப்படியே சொல்லிவிட்டு, தனது காரில் இருந்து இறங்கும்போது, ஒரு சிறுமி கடையருகே மிக வருத்தத்துடன் அமர்ந்திருப்பதைக் கவனித்தார். அவர் என்ன கஷ்டம்? என அவளிடம் கேட்டார். “நான் என் அம்மாவுக்கு ஒரு சிவப்பு ரோஜாவை வாங்க விரும்பினேன். ஆனால் என்னிடம் எழுபத்தைந்து காசுகள் மட்டுமே உள்ளன, ஒரு ரோஜாவின் விலை இரண்டு ரூபாய். ” என அவள் பதிலளித்தாள்.
அந்த நபர் புன்னகையுடன், “என்னுடன் வா. நான் உனக்கு ஒரு ரோஜாவை வாங்கி தருகிறேன்.” என அவளை தன்னுடன் அழைத்துச் சென்று ரோஜாவை வாங்கி கொடுத்தார். அத்துடன், உன்னை நானே உனது தாயிடம் அழைத்து சொல்லட்டுமா? என அவர் சிறுமியிடம் கேட்டார். அவளும் சரி என தலை அசைத்தாள்.
அவள் அவரை ஒரு கல்லறைக்கு அழைத்துச் சென்றாள். அங்கு புதிதாக தோண்டிய கல்லறையில் அந்த ரோஜாவை அவள் வைத்தாள்.
அந்த நபர் பூக்கடைக்குத் திரும்பி, செயற்கை பூக்கள் ஆர்டரை ரத்துசெய்து, ஒரு பூச்செண்டை எடுத்துக்கொண்டு 100 கி.மீ தொலைவில் வாழும் தனது தாயின் வீட்டிற்கு காரை ஓட்டிச் சென்றார்.
வாழ்க்கை குறுகியது. உங்களை நேசிக்கும் நபர்களுக்காக அக்கறையுடனும் அதிக நேரம் செலவிடுங்கள்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.