ஒரு வயதான மனிதர் இறக்கும் தருவாயில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு இருந்தார். அவர் திருமணம் செய்து கொள்ளாமல், தன் வாழ்நாள் முழுவதும் தனித்தே வாழ்ந்திருந்தார். அவரை மருத்துவமனையில் பார்க்க நீண்ட கால நெருங்கிய நண்பர் வந்தார்.
நண்பர் அந்த வயதான மனிதரிடம்,’உன்னிடம் நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். இந்த தருணத்தில் கேட்ப்பது தவறில்லை என நினைக்கிறேன். இல்லை என்றால், உன்னுடனே ஒரு உண்மை மறைந்து விடும். நீ ஏன் இத்தனை நாட்கள் திருமணம் செய்து கொள்ள வில்லை.’ என கேட்டார்.
அதற்கு அந்த வயதான மனிதர்,”எந்த குறைகளும் இல்லாத மிக சிறந்த ஒரு பெண் தான் எனக்கு மனைவியாக வர வேண்டும் என தேடினேன்” என்றார்.
நண்பர்,” இந்த உலகில் பல லட்ச கணக்கான பெண்கள் உள்ளனர். இவர்களில் ஒருவர் கூடவா? உங்களுக்கு கிடைக்கவில்லை” என்றார்.
வயதானவரோ,”ஒரே ஒரு பெண் கிடைத்தார்.”என்றார்.
“பின் ஏன் அவரை மணமுடிக்க வில்லை?” என்றார் நண்பர்.
அதற்கு அவர், “அந்த பெண்ணும், எந்த குறைகளும் இல்லாத மிக சிறந்த மனிதரை வாழ்க்கை துணையாக தேடினார்” என்றார்.
எதிர்பார்ப்புக்கள் திருமண பந்தத்தை முடிவு செய்கின்றன.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.