பண்டைய காலத்தில், மிகக் கொடூரமான மன்னர் ஒருவர் குடிமக்களை கொடுமை படுத்தி வந்தார். மக்கள் அனைவரும் பயந்தனர்.
மன்னர், நாய் ஒன்றை வளர்த்து வந்தார். அதனை மிகவும் நேசித்து வந்தார். ஒரு நாள் காலை அந்த நாய் இறந்தது. மன்னர், நாய்க்கு கடைசி சடங்குகளை ஏற்பாடு செய்தார். நகர மக்கள் அனைவரும் தகனத்திற்கு வந்திருந்தனர். மக்கள் தன்னை மிகவும் நேசிப்பதைக் கண்டு, மன்னர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
தன்னை உலகின் மிகவும் பிரபலமான ராஜாவாக அவர் உணர்ந்தார். சில நாட்களுக்குப் பிறகு மன்னர் இறந்தார். ஆனால் அவரது இறுதி சடங்குகளுக்கு யாரும் வரவில்லை.
மரியாதை என்பது நாம் சம்பாதிக்க வேண்டிய ஒன்று. மதிக்கும்படி மற்றவர்களை கட்டாயப்படுத்த முடியாது. பயத்தினால் கிடைக்கும் மரியாதைக்கும், உண்மையான மரியாதைக்கும் இடையே வேறுபாடு உள்ளது. அதைப் புரிந்து, தேவை எனில், குணத்தில் திருத்தங்களைச் செய்து மரியாதையை சம்பாதியுங்கள்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.