ஆடுகளும், ஆட்டு குட்டிகளும் மந்தையில் மேய்ந்து கொண்டிருந்தன. அப்பொழுது, ஓநாய் ஒன்று மந்தையில் மேயும் ஆடுகளில் ஆட்டு குட்டி ஒன்றை வாயால் கவ்வியது. அருகில் இருக்கும் காட்டுக்குள் ஆட்டு குட்டியை கவ்வியப்படி வேகமாக ஓட துவங்கியது ஓநாய்.
ஆட்டுக் குட்டி, ஓநாயிடம் ‘எனக்கு ஒரு கடைசி ஆசை உள்ளது. நிறைவேற்றுவீர்களா? ஓநாய்களால் மிக இனிமையான குரல் ஓசையை எழுப்ப முடியும் என கேள்வி பட்டுள்ளேன். இறக்கும்முன் உங்களுடைய இனிமையான குரல் ஓசையை கேட்க மிக ஆர்வமாக உள்ளது. என்னுடைய இந்த இறுதி ஆசையை நிறைவேற்றுவீர்களா?’ என கேட்டது.
ஆட்டுக் குட்டியில் புகழ்ச்சி மிக்க வார்த்தைகளில் மயங்கிய ஓநாயும், சரி என, கவ்விய ஆட்டு குட்டியை விடுவித்து விட்டு, மிக சப்தமாக ஊளை இட ஆரம்பித்தது. ஆட்டு குட்டியும் ஓநாயின் குரல் ஓசையை ரசிப்பது போல நடித்தது. ஓநாயும் ஆர்வம் மிகுதியில், கண்களை மூடி மிக மிக சப்தமாக ஊளையிட ஆரம்பித்தது.
ஆட்டுக் குட்டி இந்த வாய்ப்பை பயன்படுத்தி ஊருக்குள் ஓட ஆரம்பித்தது.
மந்தையில் ஆட்டுக் குட்டியை காணவில்லை என தேடி கொண்டிருந்த ஆட்டுக் குட்டியின் முதலாளி, ஓநாய் ஊளையிடம் திசையை நோக்கி இந்த ஓநாய் தான் ஆட்டுக் குட்டியை தூங்கி சென்றிக்கும் என, கிராம மக்களை துணைக்கு அழைத்துக்கொண்டு தடியுடன் வேகமாக ஓடி வந்தார்.
ஓநாய் கண்களை விழித்து பார்க்கும் பொழுது, மனித கூட்டம் கம்பும் தடியுமாக இருந்தனர். ஓநாய் அடி தாங்க முடியாமல் தப்பித்தோம் பிழைத்தோம் என காட்டுக்குள் ஓடி மறைத்தது.
முட்டாள்களுக்கும் அறிவிற்கும் தூரம் அதிகம்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.