நான்கு தவளை நண்பர்கள் உணவிற்காக காட்டுப் பாதையில் நீண்ட தூரம் பயணம் செய்தன. உணவு உண்ட பின் வீட்டிற்கு திரும்பலாம் என நினைக்கும் பொழுது, இருட்ட தொடங்கி இருந்தது. இரண்டு தவளைகள் முன்பும், இரண்டு தவளைகள் பின்பும், குத்துமதிப்பாக பாதையை கவனித்து நடந்து சென்றன.
பயணத்தின் பொழுது, தெரியாமல், முன் சென்ற இரண்டு தவளைகளும் ஆழ்ந்த பள்ளத்தில் விழுந்து விட்டன. இதனை கண்ட, பின் தொடர்ந்து வந்த இரண்டு தவளைகளும், ‘பள்ளம் மிக ஆழமாக உள்ளது. உங்களால் மீண்டு வர முடியாது. பள்ளத்தில் கிடந்தே சாக வேண்டியது தான்!’ என பள்ளத்தில் விழுந்த தவளைகளிடம் திரும்ப திரும்ப சொல்லின.
பள்ளத்தில் இருந்த இரு தவளைகளும், திரும்ப திரும்ப வெளி வர முயற்சித்தன. ஆனால், வெளியில் இருக்கும் இவ்விரு தவளைகளோ, ‘உங்களால் வெளி வர முடியாது!’ என கூறின. இதனை திரும்ப திரும்ப கேட்ட பள்ளத்தில் கிடந்த இரு தவளைகளில் ஒன்று, வெளி வர முயற்சிக்கும் பொழுது, மனம் தளரி கீழே விழுந்து இறந்தது.
மற்றொரு, பள்ளத்தில் விழுந்த தவளை மற்ற தவளைகள் கூறியதை காதில் வாங்காமல், விடா முயற்சியுடன் முயற்சித்து, பள்ளத்தை விட்டு வெளி வந்தது.
சுற்றி உள்ளவர்கள் நச்சு நபர்களாக இருக்கும் பொழுது, மன வலிமையுடன் செயல்படுவது மிக கடினம்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.