‘முதல் அபிப்ராயத்தை’ அழித்து விடும், 14 விஷயங்கள்! 14 Things That Ruin a First Impression Immediately in Tamil | AsK LIFE Motivation

Ruin A First Impression Tamil Quote

உங்களை பார்த்த தருணம், பிறர் உங்களின் மீது கொள்ளும் அபிப்ராயம், முதல் அபிப்பிராயம்.

இரண்டாவது, மூன்றாவது என பல முறைகள் உங்களை பிறர் பார்க்கையில், வேறு அபிப்ராயங்களை நீங்க அவர் மனதில் ஏற்படுத்தினாலும் முதல் முறை உங்களை பார்த்த பொழுது நீங்க அவர் மனதில் ஏற்படுத்திய அபிப்ராயத்தை எளிதில் அழிக்க இயலுமா? கடினம்.

நீங்க பிறர் மனதில் ஏற்படுத்தும் தாக்கத்தில் முதல் அபிப்பிராயத்தின் பங்கு மிக அதிகமாக இருக்கும்.

முதல் சந்திப்பில், ‘நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தனும்’ என்ற எண்ணம் உங்க மனதில் இருந்தாலும் உங்களை அறியாமல் நீங்க செய்யும் சில தவறான விஷயங்கள் உங்களை பற்றி பிறருக்கு  தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்த காரணமாக இருக்கும். அவை என்ன என இப்ப நாம் பார்க்கலாம். குறிப்பெடுத்துக்கோங்க.

பிறருக்கு நீங்க வணக்கம் சொல்லும் பொழுது அல்லது கை குலுக்கும் பொழுது, வலுவிழந்து weak ஆக இருப்பது போல உங்களை நீங்க வெளிப்படுத்தறீங்களா? என கவனித்து பாருங்க. இப்படி நீங்க செய்யும் பொழுது, உங்களை பற்றிய அபிப்பிராயம் தவறாக அமைந்து விடும்.

சந்திப்பில்,  ஒரு இடத்தில் அமரும் பொழுது, நன்கு நிமிர்ந்து அமராமல், முதுகு தண்டுவடம் வளைந்தது போல, அமர்ரீங்களா? அல்லது தரக்குறைவான விதத்தில் ஏதேனும் உடல் பாவனை செய்யறீங்களா? என யோசித்துப் பாருங்க. தவறான அபிப்பிராயம் ஏற்படும்.

உங்களுடைய முகபாவனையில், தன்னம்பிக்கை அற்ற விதத்தை நீங்க வெளிப்படுத்தினால் தவறான அபிப்பிராயம் உண்டாகும்.

பிறரின் பேச்சை நீங்க அடிக்கடி குறுக்கிடறீங்களா? 

உரையாடலில்,பிறர் மீது ஆதிக்கத்தை ஏற்படுத்தறீங்களா? 

பிறரின் கண்களை பார்த்து பேசுவதை அடிக்கடி தவிர்க்கறீங்களா?

பிறரின் தனிப்பட்ட இடத்தை ஆக்கிரமித்து, மிக அருகில் சென்று அமர்ரீங்களா?

இந்த விஷயங்கள் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்தும்.

ஒரு நேரத்தில் சந்திப்பதாக சொல்லிவிட்டு கால தாமதமாக சந்திக்கும் பழக்கம், கசங்கிய துணியை அணிந்திருப்பது, அடிக்கடி கடிகாரத்தை பார்த்துக் கொண்டே இருப்பது, நீங்க சந்தித்தவர் சொல்லவரும் முக்கிய செய்திய கவனிக்காமல் கவனக் குறைவாக இருப்பது, உணவருந்தும் இடத்தில் தரம் குறைந்து செயல்படுவது, தற்பெருமை பேசுவது, குறை சொல்லும் விதத்திலேயே பேசுவது இவை அனைத்து விஷயங்களும் உங்களின் மீது தவறான அபிப்பிராயங்கள் ஏற்பட காரணமாக அமைந்து விடும். 

எப்பொழுதுமே, தவறான அபிப்பிராயம், நல்ல அபிப்ராயத்தை விட எளிதில் மனதில் பதிந்து விடும். இதை புரிந்து, முதல் சந்திப்பை சரியாக அமைத்துக்கோங்க.

UMA LIFE COACH – Uma, Life Coach

உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.

%d bloggers like this: