ஒருவர் தனது பக்கத்து வீட்டுக்காரர் திருடன் என்று வதந்திகளைப் பரப்பினார். இதனால், அந்த பக்கத்து வீட்டுக்காரர் கைது செய்யப் பட்டார். நாட்கள் கழிந்தன. அந்த பக்கத்து வீட்டுக்காரர் நிரபராதி என மக்கள் முன்பு நிரூபிக்கப்பட்டார். தன் மீது தவறாக குற்றம் சாட்டியதற்காக அந்த மனிதர் மீது வழக்கு தொடர்ந்தார் அந்த பக்கத்து வீட்டுக்காரர்.
வதந்தி பரப்பியவர் நீதிமன்றத்தில் நீதிபதியிடம், ‘அவை வெறும் கருத்துகள். நான் யாருக்கும் தீங்கு செய்யவில்லை.’ என கூறினார். நீதிபதி அவரிடம், ‘நீங்கள் அவரைப் பற்றி சொன்ன அனைத்தையும் ஒரு காகிதத்தில் எழுதி, வீட்டிற்கு செல்லும் வழியில், அந்த காகிதத்தை கிழித்து காகித துண்டுகளை வெளியே எறியுங்கள். நாளை, தீர்ப்பை கேட்க திரும்பி வாருங்கள்.’ என கூறினார்.
அடுத்த நாள், நீதிபதி அவரிடம், ‘தண்டனையைப் பெறுவதற்கு முன்பு, நீங்கள் வெளியே சென்று நேற்று எறிந்த காகிதத் துண்டுகள் அனைத்தையும் சேகரித்து வாருங்கள்.’ என்றார்.
அதற்கு அந்த மனிதர், ‘என்னால் அதைச் செய்ய முடியாது! காற்று அவற்றைப் பரப்பி விட்டது. அவற்றை எங்கே சென்று கண்டுபிடிப்பது?’ என்றார்.
நீதிபதி, “அதே போல், நீங்க பேசியது வெறும் கருத்துக்களாக இருந்தாலும், ஒரு மனிதரின் நேர்மைக்கு களங்கங்கள் ஏற்படுத்தி விட்டது. காற்றுப் போக்கில் பரவிய இந்த செய்தி திரும்ப பெற முடியாதது. நீங்கள் ஒருவரைப் பற்றி நல்ல விதத்தில் பேச முடியாவிட்டால், எதுவும் சொல்லாமல் இருங்கள்.’ என பதிலளித்தார்.
வார்த்தைகளுக்கு அடிமையாக இல்லாமல், எஜமானராக இருக்க வேண்டும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.