Communication skill, Life improvement க்கு தேவையான மிக முக்கியமான திறமைகளில் ஒன்று.
Professional career, social gatherings ல் தொடங்கி family life வர அனைத்து இடங்களிலுமே communication, life ல் முக்கியமான part ஆக இருக்கு.
மற்றவர்களோட உங்க relationship நல்ல விதத்தில இருக்க How To Win Friends And Influence People book ல,Dale Carnegie, பல வழிமுறைகளை குறிப்பிட்டிருக்காரு.
Dale பகிர்ந்துள்ள சில முக்கிய கருத்துகளை உங்களுடைய communication skill ஐ, எப்படி நீங்க அடுத்த படிநிலைக்கு develop செய்ய என இப்ப பார்க்கலாம்.
“நாம் என்ன செய்கிறோம்? நாம் எப்படி பார்க்கிறோம்? நாம் என்ன சொல்கிறோம்? நாம் எப்படி சொல்கிறோம்? “ இந்த நான்கு விதங்களில் தான் எப்பொழுதுமே நாம பிறரிடம் communicate செய்றோம்னு, dale குறிப்பிடறாரு.
இந்த நான்கையும் ஆழ்ந்து யோசித்துப் பாருங்க. உங்களுக்கு மற்றவர்களோடு relationship எப்படி இருக்கு என தெரிந்து கொள்ள இந்த நான்கு கேள்விகளையும் மனதில் எழுப்பி பாருங்க.
உதாரணமாக, உங்க சக ஊழியர், உங்களுக்கு என்ன செய்கிறார்? உங்களை எப்படி பார்க்கிறார்? அவர் உங்களிடம் என்ன சொல்கிறார்? அவர் உங்களிடம் எப்படி சொல்கிறார்? என்பதை யோசித்துப் பாருங்க.
அவர் உங்களுடனான relationship அ எப்படி அணுகறார்னு உங்களுக்கு தெரிய வரும். இந்த 4 points ஐயும் மனதில் வைத்து மற்றவரோட எப்படி communicate செய்யனும்னு முடிவு செய்யுங்க.
நீங்க வேலை செய்யும் இடத்தில் நண்பர்களிடம் உங்களை சுற்றி உள்ள மனிதர்களிடம் ‘எப்பொழுதுமே உங்களால் ஒத்து போக முடியும்னு’ சொல்ல முடியாது. சில மன வேறுபாடுகள் கண்டிப்பாக ஏற்படும்.
எல்லாமே சரியா இருக்கற சூழலில் மற்றவர்களோட நீங்க நல்ல relationship ல இருந்திடலாம். ஆனால் மன வேறுபாடு ஏற்படும் சூழலில் உங்களால் சூழலில் சரியான விதத்தில் manage செய்ய முடித்தால் உங்களுடைய communication நல்லா இருக்குன்னு முடிவு செய்யலாம்.
மற்றவரை ஈர்க்க ‘3 முக்கியமான விதங்களில்’ நீங்க மற்றவரோட communicate செய்யனும்.
உங்களிடத்தில நீங்க முதலில் மாற்றத்தை பார்க்கும் பொழுது தான் மற்றவரிடத்தில் உங்களால் மாற்றத்தை பார்க்க முடியும்.
அதற்காக உங்களுக்குள் நீங்க மாற்றத்தை ஏற்படுத்த dale குறிப்பிட்டுள்ளபடி சிரித்த முகத்தோட இருங்க. First impression is the best impression.
பிறரை நீங்க first time சந்திக்கறப்ப எப்படி பட்ட impression அ அவருக்கு நீங்க கொடுக்கறீங்க? அந்த impression, எப்பொழுதும் அவர் மனதில நிற்கும்.
ஒருத்தர்கிட்ட நீங்க அறிமுகம் ஆகறப்ப சிரித்த முகத்தோட இருங்க. நீங்க சிரித்த முகத்தோட இருக்கறப்ப உங்களை பற்றிய நல்ல அபிப்பிராயங்கள் மற்றவர்களுக்கு ஏற்படும். பேசிய வார்த்தைகளை விட பேசாத வார்த்தைகளுக்கு அர்த்தங்கள் அதிகம். நீங்க பேசாமல் smile செய்தாலே போதும். மற்றவரை attract செய்யலாம்.
இரண்டாவது மாற்றமாக, மற்றவர்களை நீங்க சந்திக்கறப்ப அவர்களுக்கு பிடித்த topics ஐ பற்றி நீங்க அவர்களோட discuss செய்யுங்க. உங்க co worker, உங்க மேலதிகாரி இவர்கள் போன்றவர்களை ‘நீங்க கவரனும்னு’ உங்களுக்கு எண்ணங்கள் இருக்கறப்ப, ‘எனக்கு பல talents இருக்கு, நான் இவற்றில் பலவாறு சாதித்து இருக்கிறேன் என உங்களை பற்றியே, எப்பொழுதும் பேசுற பழக்கம் உங்களுக்கு இருந்தா,’ அவர்களால் ஒரு கட்டத்திற்கு மேல உங்ககிட்ட ஆர்வம் காட்ட முடியாது. உங்களை பற்றி பேசுவதை நீங்க சரியான அளவுமுறையோட குறைச்சிட்டு அவர்களுக்கு பிடித்த topics ஐ பற்றி நீங்க பேசுறப்ப உங்களால் அவர்களை ஈர்க்க முடியும்.
மூன்றாவது மாற்றமாக, மத்தவங்க உங்ககிட்ட convince ஆகனும்னு நீங்க நினைச்சா, அவர்கள நீங்க ‘அடிக்கடி yes என சொல்ல’ வையுங்க. சக ஊழியர் / மேலதிகாரி இவங்ககிட்ட நீங்க பேசரப்ப நீங்க சொல்ல நினைக்கற main points ஐ நீங்க அவங்கள ஏத்துக்க வைக்க இந்த main points ஓட தொடர்பான மற்ற information ஐ அவங்களுக்கு ஏற்ற விதத்தில் ஒவ்வொன்றா நீங்க communicate செய்யுங்க. இந்த information க்கு அவர்கள நீங்க ‘yes’ சொல்ல வைக்கறப்ப நீங்க சொல்ல விரும்பற main points களுக்கு அவங்க தானா convince ஆவாங்க.
பிறரை எளிதாக கவர இந்த மூன்று மாற்றங்களையும் நீங்க உங்களுக்குள் ஏற்படுத்துங்க.
அடுத்ததாக, ஒரு information அ எப்படி attractive ஆக communicate செய்யலாம்னு? இப்ப பார்க்கலாம்.
‘ஒரு meeting ல பேசற சூழல்ல நீங்க இருக்கறீங்க. ஒரு critical ஆன company விசயத்தை மத்தவங்ககிட்ட நீங்க discuss செய்யனும். company ல இப்ப நிறைய குறைகள் இருக்கு. உங்க co workers ஓட செயல்களில் உங்களுக்கு திருப்தி இல்லன்னு’ நினைச்சுக்கலாம். இந்த சூழலில் அவங்களை எந்த விதத்திலும் தாழ்த்தாமல் appricate செய்யும் விதத்தில் நேர்மையாக encourage செய்து நீங்க அவர்களிடம் communicate செய்யரப்ப நீங்க நினைக்கற விஷயம் சரியான விதத்தில் அவங்களை சென்றடையும்.
‘உங்களுக்கும் இது போல சில தவறுகள் ஏற்பட்டிற்குன்னு’ ஆரம்பிச்சு தவறுகளை மறைமுகமாக சுட்டிக்காட்டி தேவையான நடவடிக்கைகளை அவர்கள் எடுக்க வழிகாட்டுங்க.
ஒன்றை செய்ய சொல்லி direct ஆ நீங்க அவர்களுக்கு order கொடுப்பதற்கு பதிலாக அவர்களே action ல இறங்க ‘இந்த விதத்தில் செய்தா எப்படி இருக்கும்?’ என்பது போல விழிப்புணர்வு கேள்விகளை அவர்கள் கிட்ட எழுப்புங்க.
அவங்களை அவங்க மாத்திக்க, வாய்ப்பு கொடுங்க.
‘தவற சரி செய்யறது சாதாரண, எளிதான விஷயம்,’ என்பது போல அவர்களை encourage செய்யுங்க.
தவறை மாற்றி சரி செய்ய அவங்க முயற்சிக்கும் பொழுது அவங்களை சந்தோஷமா உணர வெச்சு அவர்களை இடையிடையே appreciate செய்யுங்க. இதை தவிர்த்து குறை சொல்கிற தோரணையில அந்த விஷயத்தை நீங்க சொன்னால் நீங்க சொல்றது உண்மையாக இருந்தாலும் கேட்பவர்களுக்கு கேட்கப் பிடிக்காது.
பேசறப்ப, இடையிடைய மத்தவங்க ஆர்வத்தை தூண்டும் விதத்தில் அவர்களோட பெயர்களை குறிப்பிட்டு,
interesting ஆன கேள்விகளை எழுப்பி பேசுங்க. இப்படி பேசறப்ப பல மணிநேரம் உங்களோட பேச்ச மத்தவங்க கேட்கற சூழல் ஏற்பட்டாலும் அவங்களுக்கு அலுப்பு ஏற்படாமல் இருக்கும்.
நீங்க மட்டுமே பேசாமல் மத்தவங்களும் அவங்க கருத்துக்களை தெரிவிக்க சில வாய்ப்புகளை கொடுங்க.
அவங்களோட points ஐ தெரிய படுத்த அதற்கான credit ஐ அவங்களே எடுத்துக்க அவங்களுக்கு வாய்ப்பு கொடுங்க.
நீங்க எந்த அளவுக்கு உங்களுக்கு முக்கியமோ அதே அளவிற்கு அவர்களுக்கு அவர்கள் முக்கியம்’ என நினைப்பாங்க. இதனை மனதில வைத்து பேசுங்க.
இந்த points களை நீங்க மனதில் வைத்து செயல்படரப்ப உங்க communication improve ஆகும்.
உங்களை மேடையில் பேச சொல்லி 10 நிமிட நேரம் உங்களுக்கு கொடுக்கறாங்க.
இந்த 10 நிமிடங்களில் ‘மத்தவங்களோட உணர்ச்சிகளை கவரும் விதத்தில் உங்களால் பேச முடித்தா?’
அது அடுத்த level communication ஆ இருக்கும்.
மத்தவங்களோட உணர்ச்சிகளை கவர ‘அவர்களோட வாழ்வில் உணர்வுபூர்வமா ஆதிக்கம் செலுத்தும் உதாரணங்களை’ மேற்கோள் காட்டி பேசுங்க.
eye contact, சரியா இருக்குமாறு பார்த்துக்கோங்க.
‘சூழலை அடுத்த முன்னேற்ற படிநிலைக்கு எடுத்து செல்ல எப்பொழுதும் உறுதுணையாக இருப்பேன்’ னு,
அவங்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துங்க.
மற்றவரோட உணர்ச்சிகளை கவர இந்த மூன்று points அ follow செய்யுங்க.
Communication ல் body language ரொம்ப முக்கியம். Body language சரியாக இருக்கறப்ப தான் உங்களை பற்றிய அபிப்பிராயம் audience யிடம் நல்ல விதத்தில் இருக்கும்.
முடிந்த அளவிற்கு audience ஐ பாத்தவாறு நிற்கனும்.
புன்னகைத்து பேசனும்.
Audience உடன் eye contact இருக்கனும்.
Straight ஆ நிமிந்து நிற்கனும்.
Deep, relaxed breath பேச்சுக்கிடையில் இருக்கனும்.
அப்பொழுது தான், பேச்சில் ஏற்றத்தாழ்வுடன் சரியாக பேச முடியும்.
உங்களோட வார்த்தைகளில் உறுதி தன்மையை நிலைநாட்டும் விதத்தில் உங்களுடைய உடல் அசைவு இருக்கனும்.
Speech ஐ சரியான விதத்தில் எடுத்து செல்ல அவ்வப்போது நடந்து கிட்டே பேசனும்.
இந்த points நீங்க follow செய்யறப்ப உங்க body language improve ஆகும் .
நட்புணர்வோட பேசுங்க.
Arguments ஏற்படரப்ப அதனை முற்றிலுமாக avoid செய்திடுங்க. இந்த உலகத்தில் யாரையும் யாராலும் திருத்த முடியாது.
‘நீங்க சொல்றது தவறுன்னு’ direct ஆ நீங்க அவங்களை சுட்டி காட்னால் அதனை எவரும் விரும்ப மாட்டாங்க.
எதிர் தரப்பில் இருப்பவர்களுக்கு முரண் படாமல் அவங்க போக்கிலேயே சென்று ஒரு விஷயத்தை பொறுமையாக communicate செய்யுங்க.
உங்ககிட்ட தவறு இருந்தால் எந்த ego வும் பார்க்காமல் உடனே அந்த தவறை ஏற்றுக் கொள்ள தயக்கப் படாதீங்க. தவறு செய்யறது மனித இயல்பு. ‘தவறை ஏற்றுக் கொள்ளவே, மிக பெரிய மனம் இருக்கனும்.’
நீங்க தவறை திருத்தி வாழ முயலறப்ப ego பார்க்காமல் எதிர்தரப்பில் இருப்பவர்களும் திருந்த முற்படலாம்.
பிறர் கோணத்தில் இருந்து அடிக்கடி நீங்க யோசித்துப் பழகும் பொழுது பிறரை எப்படி அணுக என உங்களுக்கு புரிபடும்.
இந்த points அ நீங்க குறிப்பெடுத்து follow செய்யறப்ப உங்களோட communication மேலும் develop ஆகும்.
இந்த அனைத்து points யும் குறிப்பெடுத்து ஒவ்வொரு point யும் daily பயன்படுத்த ஆரம்பிங்க.
Practical ஆக பயன்படுத்த ஆரம்பிக்கறப்ப கிடைக்கர அனுபவங்களுக்கு ஏற்ப உங்களுக்குள்ள திருத்தங்களை ஏற்படுத்தி திரும்ப திரும்ப communication ஐ மேம்படுத்துங்க.
திரும்ப திரும்ப செய்யற பயிற்சி உங்களோட communication ஐ அடுத்த படிநிலைக்கு எடுத்து செல்லும்.
பொறுமை முக்கியம். ஒன்றிரண்டு முயற்சிகள் செய்துட்டு, ஆசை பட்ட result உடனே கிடைக்கலங்கர ஏமாற்றத்தில் முயற்சியை கைவிட்டுடாதீங்க.
‘முயற்சியும் பயிற்சியும் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும்.’
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.