கிராமத்தில் சேவல்கள், கோழிகள் உள்ள வீடுகளை நீங்க உற்று கவனித்து பார்த்தால், ஒரு விஷயம் உங்களுக்கு புரியவரும். ஒரு தலைமை சேவல் இருக்கும் இடத்தில் வேறொரு தலைமை சேவல் இருக்காது. ஒவ்வொரு பகுதிக்கும் ஒரே ஒரு தலைவர் சேவல் மட்டும் தான் இருக்க முடியும். காட்டிற்கு ஒரு சிங்கம் தான் ராஜா என்பது போல.
தினம் காலை சரியான நேரத்தில் எழுந்து கம்பீரமாக, சப்தமாக கூவுவது தலைவர் சேவலின் தகுதி. இது மற்ற சேவல்களுக்கு எச்சரிக்கை ஒலி என்றும் சொல்லலாம். இவ்வாறு கூவ கூவ கிடைத்த பரிசாக, கொண்டையை கொண்டிருப்பார் அந்த தலைவர் சேவல்.
இந்த தலைவர் இறந்து விட்டால், தனக்குள் தகுதிகளை வளர்த்து வந்த ஒரு சேவல், மற்ற பகுதி தலைமை சேவல் இந்த பகுதியில் கால் பதிப்பதர்க்குள், ‘நான் இருக்கிறேன் என் கோழிகளையும் , சேவல்களையும் காக்க’ என, தினம் காலை சரியான நேரத்தில் கம்பீரமாக நின்று கூவ முயற்சி செய்து, வலுவான குரலையும், மிகப் பெரிய கொண்டையையும் பெற்று, தலைமை பொறுப்பை, உடனடியாக ஏற்றுவிடும்.
தலைமை பொறுப்புக்கு தேவையான தகுதிகளை, உங்களுக்குள் நீங்க தொடர்ச்சியாக வளர்த்து வந்தால், வாய்ப்பு கிடைக்கும் சமயத்தில், தலைவராகி விடலாம்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.