மகேஷ் என்ற சிறுவன் நிறைய நண்பர்களுடன் இருந்தான். தனக்கு நிறைய நண்பர்கள் உள்ளதாக அவன் தன் தாத்தாவிடம் மிகப் பெருமையாக சொன்னான். அவர்களுக்கும் தனக்கும் உள்ள நட்பு எப்படிபட்டது? என விவரித்தான். அதற்கு அவனின் தாத்தா, ” நீ நினைப்பது போல உனக்கு இருக்கும் நண்பர்கள் உண்மையானவர்கள் என எனக்கு தோனவில்லை. நாம் வேண்டுமானல் இதனை நிரூபிக்க ஒரு பந்தயம் வைத்துக் கொள்ளலாமா?” என்றார்.
மகேஷ் தயக்கமின்றி பந்தயத்தை ஏற்றுக்கொண்டான். இருப்பினும், தனது பள்ளித் தோழர்கள் தனக்கு உண்மையான நண்பர்கள் ‘இல்லையா’? என்பதை எவ்வாறு சோதிக்க முடியும் என்று அவனுக்கு தெரியவில்லை, எனவே அவன் தனது தாத்தாவிடம் கேட்டான். அதற்கு முதியவர், “உனக்கு தேவையானதை என் அறையில் வைத்திருக்கிறேன். இங்கேயே ஒரு நிமிடம் காத்திரு.” என சொல்லிவிட்டு சென்றார்.
தாத்தா திரும்பிவரும் பொழுது கையில் எதையோ சுமந்துகொண்டு வந்தார். ஆனால் மகேஷின் கண்களால் அங்கே எதுவும் பார்க்க முடியவில்லை.
ஆனால் தாத்தா, “இதை எடுத்துக் கொள். இது மிகவும் சிறப்பு வாய்ந்த நாற்காலி. இது கண்ணுக்கு தெரியாததால் உட்கார்ந்து கொள்வது மிகவும் தந்திரமானது. நீ இதை பள்ளிக்கு எடுத்துச் சென்று உட்கார்ந்தால், உங்களுடைய உண்மையான நண்பர்கள் யார்? என கண்டுபிடிக்க முடியும்” என்றார்.
மகேஷ் தைரியமாகவும் உறுதியுடனும், விசித்திரமான கண்ணுக்கு தெரியாத நாற்காலியை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு புறப்பட்டான்.
நண்பர்கள் அனைவரையும் ஒரு வட்டமாக அமரச் சொல்லி, மகேஷ் தனது நாற்காலியுடன் நண்பர்களுக்கு நடுவில் சென்று நின்றான். பின், மகேஷ் நாற்காலியில் அமர முயன்றான். ஆனால் அமர இயலாமல் கீழே விழுந்தான். நண்பர்கள் அனைவரும் இதனை பார்த்து சிரித்தனர்.
மகேஷ் “காத்திருங்கள், காத்திருங்கள், ஒரு சிறிய தொழில்நுட்ப சிக்கல்” என கூறி, மற்றொரு முறை அமர முயற்சி செய்தான். ஆனால் மீண்டும் நாற்காலியில் அமர இயலாமல் விழுந்து விட்டான். எத்தனை முறைகள் முயற்சித்தாலும் மேலும் தரையில் விழுந்து கொண்டே இருந்தான்… திடீரென்று, ஒரு முயற்சியில் அவன் கீழே விழவில்லை. இந்த முயற்சியில் அவன் காற்றில் மிதந்தான்…
கீழே குமிந்து பார்த்தப் பொழுது, தன் மூன்று நண்பர்கள் தன்னை தூக்கிக் கொண்டு இருந்தது அவனுக்கு புரிந்தது. அதனால் இந்த முறை அவன் கீழே விழ வில்லை. நண்பர்கள் என்று அவன் நினைத்த பலர் அவனை கேலி செய்வததை தவிர வேறு எதுவும் செய்யவில்லை. ஆனால், இவர்கள் மூவரும்…என நினைத்தான்.
உண்மையான நண்பர்கள் யார்? என்பதை மகேஷ் உணர்ந்தான். தன் தாத்தாவிடம் நடந்ததை விவரமாக கூறினான்.
கஷ்ட காலத்தில் உங்களுக்கு உறுதுணையாக இருப்பவர்கள் உண்மையான நண்பர்கள்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.