நல்ல நண்பர்களாக ஒரு எலி குட்டியும், தவளையும் இருந்தன. சில நாட்களின் எலி குட்டியின் குணநலன்கள் தவளைக்கு பிடிக்காமல் போய் விட்டது. தினம் காலை எலிக்குட்டியை பார்க்க குளத்தில் இருந்து வெளியே வரும் தவளை. ஆனால், ஒரு மரத்தின் உள்ளே ஒரு துளைக்குள் வாழ்ந்த எலி குட்டி, தவளையை சந்திக்க வராமல் இருந்தது. தன்னை எலிகுட்டி மதிக்கவில்லை என விரோதத்தை வளர்த்த தவளை, எலிக்குட்டியின் மீது விரோதத்தை வளர்த்தது.
இதன் காரணமாக, தவளை எலி குட்டியை தண்டிக்க திட்டமிட்டது. ஒரு நாள் காலை நேரத்தில், எலிகுட்டியை தவளை பார்க்கும் பொழுது, ஒரு கயிறை எடுத்து, அதன் ஒரு முனையை தன் காலுக்கும் மற்றொரு முறையை எலி குட்டியின் வாலுக்கும் கட்டியது.
தவளை துள்ளி குதித்து, எலி குட்டியை இழுத்துக் கொண்டு, நீருக்குள் நீந்தியது. எலி குட்டி தன்னை விடுவிக்க முடியாமல், நீரில் மூழ்கி இறந்துவிட்டது. தவளையானது வெற்றி பெற்ற முனைப்பில் சிரிக்க, எலி குட்டியின் உடலோ, தண்ணீரின் மேல் மிதந்தது.
குளத்தின் மேல், கடந்து செல்ல இருந்த பருந்து ஒன்று நீரின் மேல் மிதந்த எலி குட்டியை கவனித்து, கீழே வந்து எலி குட்டியை தன் அலகால் கவ்வியது. இதனை பார்த்த தவளை தன் காலில் எலி குட்டியுடன் சேர்த்து கட்டப் பட்ட கயிறு இன்னும் கழட்டப் படாமல் உள்ளதை உணர்ந்தது.
தவளையும் எலி குட்டியுடன் பருந்திற்கு இரையானது.
எதிரியின் குணநலன் என்னவாக இருந்தாலும், அவருக்கு ஆழமான குழி தோண்ட நினைத்தால் நாமும் அந்த குழியில் விழ வேண்டியது தான்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.