ஆகாஷ் மற்றும் நகுல், நெருங்கிய உறவினர்கள். பல நாட்கள் ஒன்றாக கூடி குழாவிய நெருக்கம் அவர்களுக்குள். அன்பு அவர்கள் மனதில் கொட்டி கிடக்கிறது. ஆனால் ஒரு தவறான புரிதல் ஆகாஷினுள் ஏற்பட்டு விட்டது.
ஓர் சொல், பளீரென ஆகாஷிடம் இருந்து வந்தது. நகுல் இதயம் கனத்து விட்டது. ‘தன் உறவு தானே?’ என, மனதை தேற்றி முடிப்பதற்குள், அடுத்து ஒரு பளீர் வார்த்தை. நகுலால் தாங்க முடியவில்லை .
போனால் போகட்டும் என விட்டு விட்டால், இதுவே நிரந்தர விரிசலுக்கு காரணமாகி விடும். இருவரும் அமைதியாக அமர்ந்து மனம் விட்டு தெளிவாக பேசும் பொழுது, தவறான புரிதலை சரி செய்ய வாய்ப்புண்டு.
உண்மையான உறவு அனைத்தையும் புரிந்துக் கொள்ள முயற்சி செய்யும். ஆனால், அனைத்தையும் மீறி, புரியவைக்க முடியவில்லை எனில்? என்றாவது ஒரு நாள் புரியும் பொழுது புரியட்டும் என விட்டு விட வேண்டியது தான்.
சூழ்நிலையை மாற்ற முடியவில்லை எனில், உங்கள் மனதை மாற்றுங்கள்.
– Uma, Life Coac
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.