
ரத்னா, கலா, மாலா – இந்த மூன்று பெண்களில், மூவரும் அடிப்படையில் நல்ல குணம் கொண்டவர்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு குணாதசியம்.



இதில் ரத்னா, காலத்திற்கு ஏற்ற நாகரிக எண்ணங்கள் கொண்டவர். பழங்கால கோட்பாடுகளை வெறுப்பவர். கலா, பழங்கால கோட்பாட்டில் அதிக நம்பிக்கை கொண்டவர். தற்கால நாகரிக வாழ்க்கையை வெறுப்பவர். மாலா, தனக்கு சரி என பட்டத்தை வெளிப்டையாக செய்பவர். இப்படி, இவர்கள் ஒவ்வொருவரும், வெவ்வேறு நம்பிக்கைகள், பழக்ககங்கள் கொண்டு வாழ்பவர்கள்.
இந்த மூவரில், ‘யார் நல்லவர்?’ என நீங்க நினைக்கறீங்க? பதில்கள் வேறுபடும்.
பனை மரத்தின் அடியில் அமர்ந்து பாலை குடித்தாலும், ‘கள்ளை தான் அவர் குடித்தார்’ என சந்தேகிப்பவர்கள் இவ்வுலகில் இருக்கும் வரை, அனைவருக்கும் நல்லவராக வாழ்வது சாத்தியம் இல்லை. இந்த புரிதல் அவசியம்.
குணநலன்கள், நற்பெயரின் அஸ்திவாரம். பார்ப்பவர் கண்களுக்கு ஏற்ப, ஒவ்வொருவர் பார்வையிலும், ஒருவரை பற்றிய நற்பெயர் மாற்றத்திற்கு உண்டானாலும், ஒருவருடைய குணநலன்களில் உள்ள தரம், அனைவர் கண்களுக்கும் ஒரே விதத்தில் தெரியும். முதலில் குணநலன்களுக்கு முக்கியத்துவம் கொடுங்க. பின் நற்பெயரை அதிகப் படுத்த முயற்சி செய்யுங்க.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.
