கடைகளுக்கு செல்லும் பொழுது, சிலரை சந்திக்கறீங்க. பயணத்தில் யாரையேனும் சந்திக்கறீங்க.
பூங்காக்களில் பலரை சந்திக்கறீங்க. இப்படி பொது இடங்களில், அறிமுகம் இல்லாத பலர், உங்களை கடந்து செல்வாங்க. இவர்களில் சிலரிடம் உங்களுக்கு சகஜமாக உரையாட விருப்பம் இருக்கலாம்.
தெரியாத நபரிடம் எப்படி உரையாடலை ஆரபிக்க? என்ற தயக்கம் நீங்கி சகஜமான உரையாடலை ஆரம்பிக்க 4 வழிகள் இருக்கு.
நீங்க பேச விரும்பும் நபர் அவருக்கென ஒரு எல்லைக்குள் பிறரிடம் பேச விருப்பப் படாமல் இருக்கலாம்.
busy ஆக ஏதாவது செய்து கொண்டிருக்கல்லாம். இதனை தெரிந்து கொள்ள அவரிடம் பேச அனுகும் முன் முதலில் அவரின் கண்களை ஒன்றிரண்டு நொடிகள் நேருக்கு நேர் பார்த்து மெல்லியதாக ஒரு புன்னகை கொடுங்க. அவருக்கு விருப்பம் இருந்தால் உங்களுக்கு respond செய்வார்.
இரண்டாவதாக, அவரிடம் ஒரு சின்ன உரையாடலை தனிப்பட்ட விஷயம் அல்லாததை உதாரணமாக climate பற்றி பேசுவதாக இருக்கலாம். train க்காக காத்திருந்தால் train வரும் நேரத்தை பற்றி பேசுவதாக இருக்கலாம். மளிகை கடையாக இருந்தால் ஒரு உணவு பொருளின் சுவையை பற்றி பேசுவதாக இருக்கலாம். இப்படி, பொதுவான விஷயத்தைப் பற்றி ஒரு சின்ன உரையாடலை ஆரம்பிங்க.
மூன்றாவதாக, உரையாடலை தொடர, உங்களுடைய week end plan போல சில விஷயங்களை பேச ஆரம்பித்து உங்களுக்கும் அவருக்கும் இடையே உள்ள பொதுவான ஆர்வமுள்ள விஷயங்களை பற்றி பேச தொடருங்க. sports, cooking, cinema என ஏதாவது பொதுவான ஆர்வமிக்க விசயத்தை பேச ஆரம்பிங்க. உங்களுடைய உடை நல்லா இருக்கு.
எங்க வாங்கினீங்க? என்பது போல சின்ன சின்ன பாராட்டுகள் உறவை மேம்படுத்தும்.
நான்காவதாக, உங்களை பற்றிய ஒரு சிறு personal ஆன அறிமுகத்தை அவரிடம் ஏற்படுத்துங்க. இவற்றை தொடந்து அந்த நபர் உங்களிடம் அடுத்த கட்ட உரையாடலை தொடர விரும்பலாம் அல்லது பேச்சை குறைத்து அவர் வழி செல்ல விரும்பலாம். அவரின் மனம் உணர்ந்து, உரையாடலை தொடருங்க அல்லது முடித்துக்கோங்க.
‘பார்ப்பவர் அனைவரும் பேச விரும்பமாட்டார். விருப்பமுடைவரிடம் உரையாடலை தொடருங்க.’
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.