மகேஷ் தனக்குள்ள அதே குறைகளை திரும்ப சொல்ல, ஒரு துறவியிடம் நான்காவது முறையாக வந்தார். அப்பொழுது அந்த துறவி, ஒரு நகைச்சுவை கதையை மகேஷிடம் கூறினார். அதனை கேட்டு மகேஷ் சிரித்தார்.
ஓரிரு நிமிடங்களுக்குப் பிறகு துறவி அதே நகைச்சுவை கதையை மகேஷிடம் இரண்டாவது முறையாக திரும்ப சொன்னார். அதனை கேட்ட மகேஷ் சிறிதளவு சிரித்தார்.
மூன்றாவது முறையாக அதே நகைச்சுவை கதையை மகேஷிடம் துறவி திரும்ப சொன்னார். இந்த முறை மகேஷால் சிரிக்க முடியவில்லை.
இப்பொழுது அந்த துறவி புன்னகையுடன், ஒரே நகைச்சுவைக்கு உங்களால் மீண்டும் மீண்டும் சிரிக்க முடியாது. அப்படி இருக்க, அதே குறைகளுக்கு ஏன் நீங்கள் எப்போதும் அழுகிறீர்கள்? என்றார்.
அன்றில் இருந்து மகேஷ் குறை சொல்வதை நிறுத்தி விட்டார்.
குறை சொல்வதால் எந்த பயனும் இல்லை. தீர்வை யோசித்தால் பலன் கிடைக்கும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.