குற்றத்தில் ஈடுபட்ட ஒரு குற்றவாளி, தண்டனைக்காக மன்னரிடம் அனுப்பப்பட்டார். அவரிடம் ராஜா இரண்டு தண்டனைகளைத் தேர்ந்தெடுப்பதற்காக கொடுத்தார்.
“அவரை ஒரு கயிற்றால் தொங்கவிடலாம் அல்லது பெரிய, இருண்ட, பயமுறுத்தும், மர்மமான இரும்புக் கதவின் பின்னால் இருப்பதை எடுத்துக் கொள்ள செய்யலாம்”
குற்றவாளி விரைவாக கயிற்றை முடிவு செய்தார்.
அவரை கயிற்றில் தொங்கவிட தயார் நிலையில் இருந்த பொழுது, ராஜாவிடம் அவர் ஆர்வத்துடன், “அந்த கதவின் பின்னால் என்ன இருக்கிறது?” என திரும்பி கேட்டார்.
ராஜா சிரித்துக் கொண்டே சொன்னார்: “அனைவருக்கும் ஒரே தேர்வை நான் வழங்குகிறேன். கிட்டத்தட்ட எல்லோரும் கயிற்றை தேர்ந்தெடுக்கிறார்கள்.”
“எனவே,” என்று குற்றவாளி கூறினார், “சொல்லுங்கள். கதவின் பின்னால் என்ன இருக்கிறது? அதாவது, நான் யாரிடமும் சொல்லமாட்டேன், ”என்று அவர் தன் கழுத்தில் இருந்த கயிற்றின் முடிச்சை சுட்டிக்காட்டினார்.
பின்னர் மன்னர், “சுதந்திரம், ஆனால் பெரும்பாலான மக்கள் அறியப்படாததைப் பற்றி மிகவும் பயப்படுகிறார்கள், அவர்கள் உடனடியாக கயிற்றை எடுத்துக்கொள்கிறார்கள்.” என பதிலளித்தார்.
பெரும்பான்மையான நேரங்களில் அறியப்பாடாத விஷயங்கள் பயத்தை கொடுக்கின்றன.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.