செல்வந்தர் ஒருவர் எப்பொழுதும் மகிழ்ச்சியற்று இருந்தார். அவரிடம் அனைத்து செல்வங்களும் இருந்தன. ஆனால் அவரால் மகிழ்ச்சியாக வாழ இயலவில்லை. எதனை பார்த்தாலும் அதில் குறை காண்பதையே பழக்கமாக கொண்டிருந்தார். யாரேனும் ஐஸ் கிரீம் சாப்பிட்டு மகிழ்ந்தால் கூட, இந்த ஐஸ் கிரீம் விரைவில் உருகி விடும் என்பார்.
இப்படி நாட்கள் ஓடின. ஒரு நாள் கோடையில் கனத்த மழை பெய்தது. தன்னுடைய அனைத்து வேலைகளும் செய்ய முடியாமல் போய் விட்டது என குறைப்பட்டு கொண்டு, அவர் ஜன்னலின் வழியே வெளியே பார்த்துக் கொண்டு இருந்தார்.
அப்பொழுது பிச்சைக்காரர் ஒருவர் தன் பேத்தியுடன் மழையில் மகிழ்ச்சியுடன் விளையாடுவதை பார்த்தார். விறுவிறு வென்று பிச்சைக்காரரை நோக்கி ஓடினார் அந்த செல்வந்தர்.
செல்வந்தர் பிச்சைக்காரரை பார்த்து, ‘நான் அனைத்து செல்வங்களுடனும் இருக்கிறேன். என்னால் ஒரு நாள் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை. உன்னிடம் எதுவும் இல்லை. எப்படி உன்னால் இப்படி மகிழ்ச்சியாக இருக்கிறாய்?’ என கேட்டார்.
அதற்கு அந்த பிச்சைக்காரர், நான் என்னிடம் இருப்பதை வைத்து மன நிறைவுடன் உள்ளேன். என்னிடம் என்ன உள்ளதோ அதற்கு தினம் இறைவனிடம் நன்றி சொல்கிறேன். என்னிடம் நிறைய உள்ளது போன்ற மன நிறைவு ஏற்படுகிறது. எது நடந்தாலும் அதனை நேர்மறை எண்ணத்துடன் அணுகுகிறேன் என்கிறார்.
மகிழ்ச்சி என்பது நாம் எதையும் பார்க்கும் விதத்திலும், நம் எண்ணங்களில் மட்டுமே ஒளிந்துள்ளது.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.
எப்படி இருக்கணும்..
கடலோரம். அலைகள் கரையில் மோதிச் சிதறும் காட்சி.
குருவும் அவரது சீடர்களும் காண்கிறார்கள். முதலாவது சீடனைப் பார்த்து குரு கேட்டார்,
”உனக்கு என்ன தெரிகிறது?”
‘திரும்பத் திரும்ப வந்து மோதும் அலைகளில் விடாமுயற்சி தெரிகிறது.’
அடுத்த சீடனைக் கேட்ட போது அவன் சொன்னான்,
‘துன்பங்கள் தொடர்ந்து வந்தாலும் கரையைப் போல் உறுதியாக நின்றால் சிதறிப் போகும்.’
குரு சொன்னார், ”சில நேரங்களில் அலைகளாய் இரு; சில நேரங்களில் கரையாய் இரு.”
Regards,
Shivaji.
நல்ல கதை Shiva.