ரகு, வேலைக்கு கிளம்பும் நேரத்தில், வீட்டில் மனைவியுடன் சண்டை. அந்த கோபத்தை, ஆட்டோ ஓட்டுநர், சக பணியாளர்கள் என, சங்கலி தொடர் போல, சந்திக்கும் அனைவரிடமும் காட்ட, அனைவருக்கும் கோபம், வெறுப்பு தாக்கியது.
இப்படி பட்ட சூழ்நிலையில் வாழ்வது, எப்படி இருக்கும் ? நரகம் போல் இருக்கும் . ஒருவர் படும் கோபம், ஒரு இடத்தில் உருவாகும் கோபம், சுற்றி உள்ள அனைவர் வாழ்வையும், ‘நிம்மதி அற்றதாக மாற்றும்’ சக்தியை கொண்டுள்ளது.
தனி ஒருவராக மட்டும் அல்லாமல், கூட்டாக முயலும் பொழுது தான், சொர்க்க வாழ்வை இவ்வுலகில் உள்ள அனைவரும் காண இயலும் . இவ்வுலகில் காண முடியாத சொர்க்க வாழ்வை, இறந்தப் பின் வேறுலகில் காண இயலுமா? சிந்தியுங்கள்.
அனைத்தையும் உருவாக்கும் மனிதன், ‘இவ்வுலகில் சொர்க்க வாழ்வையும்’ உருவாக்க தான் வேண்டும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.