கந்தன் குடிசை வீட்டின் முதலாளி. தினம் இரவு, கால் மேல் கால் போட்டு, ஒய்யாரமாக, கட்டிலில் படுத்தபடி, பாட்டு பாடி மகிழ்வான். மூன்று வேளைகளும், ‘அரை வயிறு தான்’ அவனுக்கு உணவு.
அவன் பக்கத்து வீட்டு சுப்புவின் மாளிகை, இருளிலும் பள பள என மின்னும். சுப்புவிற்கு இல்லாத வசதிகள் இல்லை.
ஆனால், சுப்புவின் மனமோ, மன அழுத்தத்தின் உச்சத்தில் தவித்தது.
குடிசை வீட்டின் சொந்தகாரரான கந்தனுக்கு, மாளிகை வீட்டின் சொந்தகாரரான சுப்புவை விட அதிக கவலைகள். ஆனால், கந்தனுக்கு இல்லாத மன அழுத்தம், சுப்புவிற்கு வந்தது எப்படி? அழாத ‘பிறந்த குழந்தைகள்’ உண்டா? இவர்களுக்கு என்ன கவலைகளோ! கவலைகள் அற்ற மனிதர்கள் யாரும் இவ்வுலகில் இல்லை.
கவலைகளை ஒருவர் எப்படி தாங்கி கொள்கிறார்? என்பதில் உள்ளது தீர்வு.
‘மனம் தாங்க முடியாத கவலைகள், ஒருவருக்கு கொடுக்கும் வெகுமதி, ‘மன அழுத்தம்’. தன்னை சுற்றி சூழல் எப்படி இருந்தாலும், தன் மனதை ஆள தெரிந்தவன், மன அழுத்தத்தை வெற்றி கொள்கிறான்.’
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.