Personal ளான விஷயமாக மனதில் உள்வாங்க தேவை இல்லாத ஒரு விஷயத்தை personal ஆன விஷயமா நீங்க நினைக்கும் பொழுது, தேவையில்லாத மன வலியை உங்களுக்குள் நீங்க ஏற்படுத்தறீங்க.
பிறர் செய்வது சொல்வது அவரின் தகுதி சார்ந்த விஷயம். ஒருவர் கொடுப்பதை நீங்க வாங்கி கொள்ள மறுத்தால் எப்படி அது உங்களுடையதாகும்? அது போல தான், ஒரு விஷயத்தை நீங்க உங்களுக்கானது என ஏற்க மறுத்தால்! தேவை இல்லாத இந்த மன வலி ஏற்படாது.
அதிக உணர்ச்சிவயப் படும் நபர்களுக்கு என இருக்கும், மிகப் பெரிய பிரச்சனையாக தெரிவது, தேவையில்லாத விஷயங்களை கூட personal ஆக நினைப்பது.
விஷயத்தை personal ஆக எடுத்துக் கொள்ளாமல் இருக்க சொல்லவிருக்கும் 5 வழிமுறைகளை பின்பற்றுங்க.
மத்தவங்க என்ன நினைப்பாங்க என யோசிப்பதை நிறுத்துங்க. ‘உங்களுடைய மதிப்பு உயர்ந்தது’ என்ற எண்ணத்தை உங்களுக்குள் ஏற்படுத்துங்க. உங்களை நீங்க மதிப்பு மிக்கவராக நினைக்கும் பொழுது மதிப்புமிக்க ஒன்ற தேவையற்று காயப் படுத்த தோனாது.
சில விஷயங்கள், மேலோட்டமாக பார்க்கும்போது நீங்க personal ஆக எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயமாக தென்பட்டாலும், உண்மை நிலை வேறு போல இருக்கும். ஆரம்பத்திலேயே, அவசரமா, முடிவுக்கு வந்துராதீங்க. உண்மைநிலை புரிந்து கொள்ள முற்படுங்க.
மதிப்பு குறைவான ஒரு விஷயம் personal ஆ நடக்கும் பொழுது உடனே react செய்ய ஆரம்பித்தால் சூழ்நிலை எதிர்மறையாக மாறிடும். இதுவும் கடந்து போகும் என சூழலை ஆற போடும்பொழுது விஷயம் கடந்து போகும்.
எதிர்மறை மனிதர்களால், நீங்க எடை போடப்படும் சூழலில் இருந்து வெளிவந்து உங்களுக்கான நேர்மறையான மகிழ்ச்சியான உலகத்தை அமைந்து வாழுங்க. Personal ஆக எடுக்க வேண்டிய விஷயங்களோட எண்ணிக்கை குறையும்.
வலிமையான மனம், தனிப்பட்ட விதத்தில் விஷயத்தை மனம் நினைக்காமல் தடுக்கும் திரை.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.