சூழ்நிலை, உணர்வுபூர்வமாக உங்களை கட்டுப்படுத்தாமல் உங்களால் சுதந்திரமா செயல்பட முடியுதா? என யோசித்துப் பாருங்க. முதிர்ந்த மனநிலையுடன் இருப்பவரை சூழ்நிலை கட்டுப் படுத்தாது. சூழ்நிலையை தனக்கேற்றார் போல, எப்படி கையாளனும் என்ற புரிதல், உணர்வுப்பூர்வமாக, முதிர்ந்த மனநிலையுடன் இருப்பவருக்கு இருக்கும்.
உணர்வு பூர்வமான முதிர்ந்த மன நிலைய நீங்க பெற 5 வழிமுறைகள் இருக்கு. அவற்றை இப்ப பார்க்கலாம். குறிப்பெடுத்துக்கோங்க.
அனைத்தையும் perfect ஆக செய்பவர் இவ்வுலகில் இல்லை என்பதை புரிந்து, பிறரின் குறைகளை மனதளவில் ஏற்று, சூழலுக்கு முரண்படாமல் என்ன செய்தால் நினைத்ததை வெற்றிகரமாக முடிக்க முடியும்? என யோசித்து நேர்மறையாக செயல்படுங்க.
உங்களுடைய மற்றும் பிறரின் தனிப்பட்ட இடம் Personal Space க்கு மதிப்பளித்து ஆரோக்கியமான வரம்புகளை உறவுகளுக்குள் ஏற்படுத்தி, ஆரோக்கியமாக உறவுகளை நிர்வகித்து வாழுங்க.
உணர்ச்சிகளை தூண்டும் சூழ்நிலை ஏற்பட்டாலும் உணர்ச்சிகளால் செயலாற்றாமல் சாதாரண மனநிலைக்கு மனம் வரும் வரை உணர்ச்சிகளை தள்ளிப் போட்டு மனக் கட்டுப்பாட்டுடன் செயல்படுங்க.
உணர்ச்சிவயப்பட்ட சூழலில், உணர்ச்சிவயப்பட்டதன் மூலக் காரணத்தை புரிந்து, இந்த சூழல் மீண்டும் ஏற்பட்டால் மன முதிர்ச்சியுடன் உணர்ச்சியை எப்படி கையாள? என யோசித்து, தவறை திருத்தி செயல்பட ஆரம்பிங்க.
உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல் ஒருவர் உங்களிடம் விவாதம் செய்தாலும், பொறுமையாக முதிர்ந்த மன நிலையுடன் கருத்து பரிமாற்றம் செய்ய பழகுங்க.
இந்த 5 வழிமுறைகளை தினவாழ்வில் நீங்க செயல்படுத்தும் பொழுது உணர்வு பூர்வமான முதிர்ந்த மனநிலை உங்களுக்கு மேம்படும்.
உணர்வுகள் உங்களை கட்டுப் படுத்தாமல் உணர்வுகளை உங்களால் கட்டுப் படுத்த முடிந்தால் உணர்வுப்பூர்வமான ‘முதிர்ந்த மனநிலை’ உடையவராக உங்களால் இருக்க முடியும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.