‘ஆசைப் பட்டது கிடைத்தாலும், கிடைக்காவிட்டாலும்,’ எப்பொழுதும் மகிழ்ச்சியாகவே மனதை வைத்துக் கொள்ள சொல்லப் போகும் ’10’ பழக்கங்களை நீங்க பின்பற்றினால் முடியும். அவற்றை இப்ப பார்க்கலாம். குறிப்பெடுத்துக் கோங்க.
நினைப்பது ஒன்றும், நடப்பது ஒன்றுமாக இருந்தாலும், ஏன் இப்படி நடக்கிறது என அறிவிற்கு புரிப் படாமல் இருந்தாலும், யதார்த்தம் இதுதான் என நடப்பதை மனதளவில் நேர்மறையாக ஏற்றுக் கொண்டு எப்பொழுதும் நேர்மறையாக சிந்திக்கும் பழக்கத்தை கொண்டிருக்கும் பொழுது மகிழ்ச்சியான மனிதராக நீங்க வாழ முடியும்.
கோபம், வெறுப்பு, பொறாமை போன்ற எதிர்மறை உணர்வுகள் மனதை அண்டாமல் தடுக்கும் பழக்கம் உங்களுக்கு இருக்கனும்.
‘கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை எவ்வளவு வருந்தினாலும் மாற்ற முடியாது’ என்பதை புரிந்து கட்டுப்பாட்டில் உள்ளதை சிறப்பாக செய்யும் பழக்கம் மகிழ்ச்சியான மனிதர்களுக்கு இருக்கு.
“மகிழ்ச்சியான மனிதர்கள் இருக்கும் சூழலில் இருக்கும் பொழுது, மகிழ்ச்சி, தானாக கிடைக்கும் என்பதை புரிந்து,” தன்னை சுற்றி மகிழ்ச்சியான மனிதர்கள் இருக்குமாறு பாத்துக் கொள்ளும் பழக்கம் மகிழ்ச்சியான மனிதருக்கு உண்டு.
பிறர் தன்னை பாராட்ட வேண்டும் என காத்திருக்காமல் தன்னை தானே ஊக்குவித்து தனக்கு தானே பாராட்டிக் கொள்ளும் பழக்கத்தை கொண்டவர் மகிழ்ச்சியான மனிதர்.
‘பிடிக்காத வேலை’ செய்ய வேண்டிய நிலைமை ஏற்பட்டாலும் அதனை சந்தோசமாக செய்யும் பொழுது, மகிழ்ச்சி கிடைக்கும் என்பதை புரிந்தவர் மகிழ்ச்சியான மனிதர். எந்த வேலை செய்தாலும் அதனை சந்தோசமாக செய்யும் பழக்கத்தை ஏற்படுத்திக்கோங்க.
உடல் ஆரோக்கியமோ, மன ஆரோக்கியமோ இல்லாத பொழுது ‘மகிழ்ச்சிக்கு’ வாழ்க்கையில் இடம் இல்லை.
இதை புரிந்து, ஆரோக்கியத்த பராமரிக்கும் பழக்கத்தை கொண்டிருங்க. ஆரோக்கியமான உறக்கம் இருக்குமாறு பாத்துக்கோங்க.
உறவுகளிடம் எதிர்பார்ப்பு இல்லாமல் வாழும் வாழ்க்கை, அவர்களிடம் உள்ள நல்லதை மட்டும் பார்த்து பழகும் பழக்கம், உங்களுடைய மகிழ்ச்சி கெடாமல் இருக்க அவசியமான பழக்கம்.
உங்களால் இயன்ற உதவியை பிறருக்கு செய்து, அதில் மகிழ்ச்சி காணும் பழக்கத்தை கொண்டிருங்க.
உங்களுக்கான மகிழ்ச்சி ( happy ) உங்களுக்குள் மட்டும் தான் உள்ளது என்பத புரிந்து செயல்படுங்க.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.