சந்துருவிற்கு வாழ்வில் அடுத்தடுத்த தோல்விகள். பட்ட காலிலேயே படும். கெட்ட குடியே கெடும் என்பதற்கு ஏற்ப, சந்துரு சந்திக்காத கஷ்டங்கள் இல்லை. ஒரு கஷ்டம் நீங்கினால், மறு கஷ்டம். இத்தனை கஷ்டங்களை சமாளித்தாலும், அவரால், தன் மனைவி ஏற்படுத்திய மன காயத்தை மட்டும் ஆற்ற முடிய வில்லை. இந்த மன காயத்துடன் அவரால் எந்த பணியிலும் மனதை செலுத்த முடியவில்லை.
இந்த சந்துருவை போல, ஏதோ ஒரு சில காரணங்களினால், மன காயங்களினால் தவிப்பவர்கள் ஏராளம்!
ஒருவருடைய வாழ்வில் ‘ஒரு நிகழ்வு’ ஏற்படும் பொழுது, அதே விதமான நிகழ்வு வேறு நபரின் வாழ்வில் ஏற்பட்டால், ஒருவருக்கு மன காயமாக உள்ளது, மற்றவருக்கு எந்த காயத்தையும் ஏற்படுத்துவது இல்லை. ஏன் இப்படி? பிரச்சனைகளை மனம் உள்வாங்கும் விதம். ஒவ்வொருவருக்கும் வேறு போல இருக்கு.
பிரச்சனைகளை, ‘மனக் காயம்’ ஏற்படாதவாறு உள்வாங்குங்க.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.