‘சுயமரியாதையை’ மேம்படுத்த, 5 குறிப்புகள்! 5 Tips for Improving Self Esteem in Tamil | AsK LIFE Motivation

How To Increase Self-Esteem Tamil Quotes

உங்களைப் பற்றிய உங்களுடைய மதிப்பீடு என்னவாக உள்ளது? உங்க விரக்தி மனப்பான்மையின் அளவீடு, நீங்க பெருமையாக உணர்வதன் அளவீடு, வெற்றி அளவீடு, நம்பிக்கை அளவீடு அனைத்தும் சேர்ந்து தான் உங்களுடைய சுயமரியாதைக்கு நீங்க கொடுக்கும் மதிப்பீடு இருக்கும்.

உங்களுடைய குழந்தை பருவம் எப்படி அமைந்தது? சமூகம் மற்றும் உங்க வாழ்க்கையில் உள்ளவர்கள் உங்களை நீங்க எப்படி உணர காரணமாக உள்ளார்கள்? இவை அனைத்தும் உங்க சுயமரியாதையின் அளவிற்கு காரணாமாக இருக்கும்.

உங்க சுயமரியாதையை மேம்படுத்த 5 குறிப்புகளை இப்ப பார்க்கலாம்.

உங்களுடைய எண்ணங்களையும், நம்பிக்கைகளையும் நீங்க உயர்த்தும் பொழுது சுயமரியாதையை உயர்த்தலாம்.

நீங்க படிக்கும் சூழல், நீங்க வேலை செய்யும் சூழல், இப்படி எந்த சூழல் உங்களுடைய சுயமரியாதை தாழ்த்தப்பட காரணமாக உள்ளது? உங்களுடைய சுயமரியாதையை தாழ்த்தும் விதத்தில் சிக்கலை ஏற்படுத்தும் சூழல் எது என கண்டுபிடிங்க. இந்த சூழலில் இருக்கும் பொழுது உங்க எண்ணங்கள், சிந்தனைகள் என்னவாக உள்ளது? என ஆராய்ச்சி செய்யுங்க.

உங்களுடைய எண்ணங்களும் சிந்தனைகளும், எதிர்மறையாகவோ எதிர்மறை நேர்மறை கலந்தோ இருக்கலாம்.

அடுத்து, இந்த எண்ணங்கள் நிஜமாகவே சரியானது தானா? என்ற கேள்வியை எழுப்புங்க. இந்த ‘எதிர்மறை எண்ணங்களை’ ஒரு சவாலாக மனதளவில் எடுத்துக்கோங்க. ‘நம்பிக்கை வரிகளை கொண்டோ, உங்களின் இந்த நிலைமையை நீங்க மனதார ஏற்றுக் கொண்டு அடுத்து என்ன என நேர்மறையாக யோசிப்பதன் மூலமாகவோ, ‘தவிர்த்து விடு’ என்ற வரியை கொண்டோ, நேர்மறையில் மனதை செலுத்தியோ,’ உங்களுடைய எண்ணங்களை உயர்த்துங்க. சுயமரியாதை மேம்படும்.

உங்களை பிறருடன் ஒப்பிட்டு பார்க்காமல் (Don’t Compare) இருப்பது, உங்களுடைய பலத்தில் கவனத்தை செலுத்தி வாழ்வில் முன்னேறும் செயல், திறமைகளை மேம்படுத்துதல் மூலமாக உங்க சுயமரியாதையை உயர்த்தலாம்.

யாராலும் எவராலும் 100 சதவீதம் perfect ஆக இருக்க முடியாது. உங்களை நீங்களே தவறாக விமர்சிப்பதை, நினைப்பதை நிறுத்துங்க.

UMA LIFE COACH – Uma, Life Coach

உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.