தனக்கும், தன் கறுப்பின தென்னாப்பிரிக்க மக்களுக்கும் அரசாங்கம் கொடுத்த மதிப்பினை மண்டேலா ஏற்றுக் கொள்ளவில்லை. அரசாங்கம் என்ன தான் சொன்னாலும், எவ்வித மதிப்புகளை கொடுத்தாலும், தன் இனத்தவரின் மதிப்பு (சுய மதிப்பீடுகள்) இது அல்ல என அவர் நன்கு அறிந்திருந்தார்.
அரசாங்கம் நிகழ்த்திய மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கு எதிர்ப்பாக, அவர் போராடினார். தன் சுய மதிப்பை காப்பாற்ற, தன் இனத்தவரின் சுய மதிப்புகளை காப்பாற்ற, 27 ஆண்டுகள் சிறைவாசம் செய்தார்.
மே 10, 1994 அன்று, தென்னாப்பிரிக்காவின் முதல் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியாக அவர் பதவியேற்றார். தன் சுய மதிப்பை உணராமல், அரசாங்கம் கொடுத்த மதிப்பு தான், தன் மதிப்பு என அவர் வாழ்ந்திருந்தால், தென்னாப்பிரிக்காவின் ஜனாதிபதியாக அவரால் உருவெடுத்திருக்க முடியுமா?
தன் சுய மதிப்பை உணரும் மனிதன், எந்த சூழலிலும் தலை நிமிந்து வாழ்கின்றான்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.