சங்கர் 10 வயது சிறுவன். அவனுக்கு இருட்டு என்றால் பயம். இருட்டில் பூதம் வந்துவிடுமோ? என்ற பயம். அவனால், இரவில் விளக்கு வெளிச்சம் இல்லாமல் உறங்க இயலாது. இதனை கண்ட அவனின் பெற்றோர், பூதம் என்ற ஒன்று இல்லை. எந்த பூதமும் இரவில் வராது. பயப்படாதே என்றனர். ஆனால், சங்கருக்கு மனதளவில் புரிந்தும், பயப்டாமல் இருக்க முடியவில்லை. நிழல் உருவங்களை பார்த்து மிகவும் பயப்படுவான்.
இவனின் பயம் தீர்க்க, அவனின் தந்தை ஒரு வழி செய்தார். கண்கள் தெரியாத ஒரு சிறுவனை, சங்கருக்கு அவர் அறிமுகம் செய்து வைத்தார். இந்த சிறுவனை கண்டவுடன் சங்கருக்கு ஒரே வியப்பாக இருந்தது. உனக்கு கண்கள் இல்லாததால், எப்பொழுதும் இருட்டாக அல்லவா இருக்கும்? பயம் இல்லையா? என சங்கர் அந்த சிறுவனிடம் கேட்டான். அதற்கு அந்த சிறுவன், ‘என் கைகளை கண்களாக பயன்படுத்துவேன். பயம் இல்லை என்றான்.’
இருட்டில் கைகளை கண்களாக பயன்படுத்தினால் பயம் வராதா? என தன் தந்தையிடம் சங்கர் கேட்டான். அவன் தந்தையும், இரவு உறங்க செல்லும் பொழுது, முயற்சி செய்து பார் என்றார்.
அன்று இரவு உறங்க செல்லும் பொழுது, தன் அறையின் விளக்கை அவன் பயந்து பயந்து அணைத்தான். முயற்சி செய்து பார்க்கலாம் என, பயமுறுத்தும் நிழல் உருவத்தை நோக்கி, மெல்ல மெல்ல கைகளை கொண்டு தடவி கொண்டே சென்றான்.
அடுத்த நாள் காலை, தன் தந்தையை நோக்கி புன்முறுவலுடன் சங்கர் ஓடி வந்தான். என்னை பயமுறுத்திய நிழல் உருவத்தை, என் கைகளை கண்களாக பயன் படுத்தி தொட்டு பார்த்தேன். அது என்னுடைய கோமாளி பொம்மை என்றான்.
பயம் ஏற்படும் பொழுது, உங்க பயத்திற்கு காரணமான சூழலில் ஏற்கனவே இருப்பவர்கள் என்ன செய்கிறார்கள் என ஆராந்து பாருங்கள். வழி பிறக்கும்.
– Uma, Life Coach
உங்களுடைய வாழ்க்கை தரத்தை உயர்த்த உங்களுக்கு விருப்பமா? இப்பொழுதே செயலாக்கத்தில் இறங்குங்க.